Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் தாய்மாமனின் 20 மாட்டு வண்டிகள்.. 200 சீர் வரிசை அசத்தல் பொக்கிஷம்! வாயடைத்து போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நவீன தொழில்நுட்பமும் மேலைநாட்டு கலாச்சாரமும் நம்முடைய அன்றாட வாழ்வை ஆக்கிரமித்து வரும் வேளையிலும், தமிழகத்தின் கிராமப்புறங்களில் பாரம்பரிய வேர்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சில நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன... அப்படியொரு சம்பவம்தான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடந்துள்ளது.. அங்கு நடந்துள்ள ஒரு காதணி விழா, ஒட்டுமொத்தப் பகுதியையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்திதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது... அதனை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - மாலியபுரம் தம்பதியினர்... இவர்களது 2 குழந்தைகளுக்கு காதணி விழாவில் நடைபெற்றது.. இந்த விழாவில்தான் காலத்தால் அழியாத தமிழ் பண்பாடு பறைசாற்றப்பட்டது.

Dindigul Nilakottai Seer Varisai Bull Cart Procession Rare Seer Varisai Tamil Heritage

மறக்க முடியாத மாட்டு வண்டி சீர்வரிசை

விவசாய பின்னணியைக் கொண்ட இந்த குடும்பத்தின் விழாவிற்கு, மாலியபுரத்தின் சகோதரர் வேல்முருகன் தனது அக்கா குழந்தைகளுக்குச் சீர் கொண்டு வந்தார்..

அதுவும் எப்படி? ஆடம்பரக் கார்களிலோ அல்லது லாரிகளிலோ பொருட்களை ஏற்றி வராமல், நம்முடைய முன்னோர்களின் அடையாளமான 20 மாட்டு வண்டிகளில் 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை அணிவகுத்து வர செய்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சீதனமாக வெள்ளிப் பாத்திரங்கள்

இ.காமாட்சிபுரத்திலிருந்து இ.கொங்கப்பட்டி கிராமம் வரை நீண்ட இந்த மாட்டு வண்டி ஊர்வலமானது, பழங்கால திருமணங்கள் மற்றும் திருவிழா கோலங்களை நினைவுபடுத்துவதாக அமைந்தது.

இதில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால், இந்த சீர்வரிசையில் வெறும் பொருட்கள் மட்டுமே இடம்பெறவில்லை, அவை ஒவ்வொன்றும் "இரட்டைச் சீர்" எனும் தமிழ் மரபை பிரதிபலித்தன.

அதாவது பித்தளை பானைகள், அண்டாக்கள், பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இரட்டை எண்ணிக்கையில் வழங்கப்பட்டன. மேலும், அன்றாட தேவைகளான உப்பு, மிளகாய், மஞ்சள் முதல் இனிப்பு மற்றும் கார வகைகள் வரை அனைத்தும் பாரம்பரிய முறைப்படி தட்டில் அடுக்கி எடுத்து வரப்பட்டன. இதனுடன் ஆட்டுக்கிடாய்கள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களும் சீர் வரிசையில் முக்கிய இடம் பிடித்தன.

கலை பொக்கிஷங்கள்

வெறும் பொருட்களின் அணிவகுப்பாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் கலை பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வாகவும் இது அமைந்தது. தாரை தப்பட்டை முழங்க, வாண வேடிக்கைகள் அதிர, தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளுடன் இந்தச் சீர்வரிசை ஊர்வலம் கிராம வீதிகளில் உலா வந்தது.

மண்ணின் கலைகளையும், மாடுகளின் மணியோசையையும் ஒருசேரக் கண்ட கிராம மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் இந்த ஊர்வலத்தை பார்த்தார்கள்... அந்த கிராமம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் பலர் திரண்டு வந்து இதனை வேடிக்கை பார்த்தார்கள்.. பலரும் இதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து கொண்டார்கள்..

மறக்காத கிராமத்தின் ஈரம்

பணம் மற்றும் ஆடம்பரமே மேலோங்கி நிற்கும் இன்றைய சூழலில், விவசாயத்தையும் கால்நடைகளையும் மதிக்கும் இது போன்ற செயல்கள், அடுத்த தலைமுறைக்கு நம்முடைய பண்பாட்டை கடத்தும் பாலமாக அமைகின்றன.

நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தாலும், தன்னுடைய குல வழக்கத்தையும் கிராமத்து ஈரத்தையும் மறக்காத இந்த நிலக்கோட்டை விவசாயக் குடும்பத்தின் செயல், தமிழர்களின் வாழ்வியல் பெருமையை உலகிற்கு மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்லி உள்ளது... செமல்ல...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+