திண்டுக்கல்லில் ஆச்சரியம்.. பெருமாள் வீட்டில்.. 24 மணி நேரமும் "பால்" கொட்டுதாமே.. அந்த "தெய்வீகம்"
24 மணி நேரமும் பால் தரும் தெய்வீக பசுவை கிராம மக்கள் வணங்கி வருகிறார்கள்
திண்டுக்கல்: நம்பவே முடியாத அளவுக்கு ஒரு ஆச்சரிய சம்பவம் ஒன்று திண்டுக்கல்லில் நடந்து கொண்டிருக்கிறது.. தொடர் அதிசயங்களால், பெருமாள் மிகவும் பூரித்து போயுள்ளார்.
சில சமயங்களில் பசுக்கள் நம்மை திகைக்க செய்து விடுகின்றன.. நம்ப முடியாத அளவுக்கு ஒருசில செய்திகள் பசுக்கள் குறித்து வெளிவருவதை காண முடிகிறது.
இப்படித்தான், கடலூரில் ஒரு விநோத சம்பவம் 2 வருடங்களுக்கு முன்பு நடந்தது.. அங்குள்ள திருமானிக்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. தனியார் சர்க்கரை ஆலையில் அதிகாரியாக வேலை பார்த்து கொண்டிருந்தவர், திடீரென அந்த வேலை பிடிக்காமல், தூக்கி எறிந்துவிட்டார்.

பசுமாடு
சொந்த கிராமத்திற்கே வந்து இயற்கை விவாசாயம் செய்ய ஆரம்பித்தார்.. ஆடு, மாடு, கோழிகளையும் வளர்த்து வருகிறார்... கால்நடைகளிடமிருந்து கழிவுகளை பெற்று நிலத்தில் அவைகளை உரமாக்கி வருகிறார்.. இவர் வைத்திருக்கும் பசுக்களில் ஒன்று, கன்று ஒன்றை ஈன்றுள்ளது... அன்றிலிருந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பாலை தருகிறதாம்.. எப்படி தெரியுமா? பாத்திரை அந்த பசுமாட்டின் மடியில் கொண்டு சென்றாலே தானாகவே பாத்திரத்தில் பால் நிரம்பிவிடுமாம்..

அதிசய பசுமாடு
கன்றுக்கும் தேவையான பாலை கொடுத்தாலும், பாத்திரத்தை காண்பித்தாலே தானாக பால் கொடுக்கும் இந்த அதிசய பசுமாட்டை அக்கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றதாக, அப்போது செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. இப்போதும் ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.. வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்.. 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் மயில்.. 46 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.. பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

சினை ஊசிகள்
இவர் சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.. அந்த கன்றுக்குட்டி இப்போது வளர்ந்து, தெய்வீக தன்மையுடன் காணப்படுகிறதாம்.. இந்த பசுமாடு, எந்நேரமும் பால் தருகிறதாம்.. இத்தனைக்கும் பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும், 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் உள்ளதாக சொல்கிறார்கள்.. எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால், அந்த பகுதி மக்களும் இந்த பசுவை ஆச்சரியத்துடன் பார்த்து, வணங்கியும் வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், உடனே இந்த பசுமாட்டிடம் ஓடிச்செல்கிறார்கள்.

விநோதம்
அந்த பசுவுக்கு புல்கட்டு, கீரை, தீவனங்களை கொடுத்து, அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்... இப்படி பூஜிப்பதால், தினமும் பசுவை குளிப்பாட்டி, மஞ்சள் பூசி அலங்கரித்து வைத்துள்ளனர்... பசு கறக்கும் பாலினையே, அங்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சி குடிப்பதற்கு பெருமாள் கொடுத்து வருகிறார். அந்த பாலினை அருந்தும் பொதுமக்களும், அமிர்தம்போல் வித்தியாசமான சுவையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்... இந்த பசுவிடம், எந்த கோரிக்கை வைத்தாலும், அது உடனுக்குடன் நிறைவேறி வருவதால், தெய்வீக தன்மை கொண்ட அந்த பசுவை காண பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வந்து வழிபட்டு செல்கின்றனர்...

ஹேப்பி பெருமாள்
இதுகுறித்து பெருமாள் சொல்லும்போது, கூலிவேலை பார்த்து வந்த தான் பலவித பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தேன்... இந்த பசு வந்தபிறகு எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துள்ளது. இப்போது நான் ஒரு முதலாளி ஆனதுபோல் நம்பிக்கையோடு இருக்கிறேன்.. எங்களை பார்த்து இந்த பசுவை பார்ப்பதற்காக தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து போகிறார்கள்.. அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.. இது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பூரித்து சொல்கிறார் பெருமாள்..!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications