90 ஏக்கரில் நிலம்.. பட்டா இல்லாத சொத்துக்கள் பதிவு! வக்பு வாரியத்துக்கு பத்திர பதிவுத்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திருச்செந்துறை கிராம மக்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்த நஞ்சை - புஞ்சை நிலங்களையும், வாழ்ந்து வந்த வீடுகளையும், வாங்கவும் விற்கவும் முடியாமல் தவித்து வந்த நிலையில், திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி திருச்செந்துறை கிராமத்தில் வக்ஃப் உரிமை கொண்டாடும் நிலத்தை யாரும் வாங்கவும் விற்கவும் முடியும். இந்நிலையில், திருச்செந்துறை போன்று, பழனியிலும் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதறகாக பதிவுத்துறை வக்ப் வாரியத்திற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் நிலம், வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று பத்திரப்பதிவிற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

90 Acre Land Properties patta 90

கடந்த 3 ஆண்டுகளாக பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாலசமுத்திரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களை பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்யவோ, வாங்கவும் முடியாத நிலைமை இருந்து வந்தது.

பத்திரப்பதிவுக்கு அனுமதி

இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பிறகு, தமிழக அரசு தலையிட்டு முறையான விசாரணை செய்து, பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள நிலங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது இல்லை என்று தெரிய வந்ததால் பத்திரப்பதிவுக்கு அனுமதி அளித்தது.

பொதுமக்கள் தங்களது பெயரில் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தால் அதனை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதால் பாலசமுத்திரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்னர்.

இந்நிலையில், பாலசமுத்திரம் கிராமத்தில், குறிப்பிட்ட சில சர்வே எண்களுக்கு உட்பட்ட, 90 ஏக்கர் நிலம் தங்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டது என்று வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுகிறது.

பதிவுத்துறை அலுவலகம்

இந்த நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி, வக்ப் வாரிய நிர்வாகம், பதிவுத்துறை தலைவருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.. இதற்கு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் பதில் அளித்துள்ளது:

அதில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில், வக்ப் வாரியம் கோரிக்கை விடுத்துள்ள நிலங்கள் மீது, வக்ப் வாரியத்துக்கு உள்ள உரிமையை, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில், குறிப்பிட்ட சர்வே எண்கள், வக்ப் வாரியம் பெயரில் பட்டா இருப்பதாக குறிப்பிடப்படாத நிலையில், அந்த நிலங்களின் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது.

பதிவுத்துறை விளக்கம்

தனியார் பெயரில் பட்டா காணப்பட்டால், அதன் உட்பிரிவு பட்டா, வக்ப் வாரியம் பெயரில் தெளிவாக இல்லாவிட்டால், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது. இத்தகவல் வக்ப் வாரிய நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, திருச்சி மாவட்டம் திருச்செந்துறை போலவே , பழனியிலும் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, பதிவுத்துறை வக்ப் வாரியத்திற்கு இவ்வாறான விளக்கத்தை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+