’மாஜி’ முன்னால் பாக்சிங் செய்த ர.ர.க்கள்! இருக்கிற பிரச்சினையில் இதுவேறயா? எடப்பாடிக்கு வந்த தலைவலி!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து அதிமுக பிரமுகர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னணி குறித்து விசாரித்த போது முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இருதரப்பாக செயல்பட்டதே மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர்பந்தல் திறக்கும் விழா அதிமுக துணை பொது செயலாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிய போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் நத்தம் விசுவநாதன் வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
பழனியில் மோதல்: அப்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் தொடர்ந்து தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக புகார் கூறினார். கடந்த ஆண்டு தன்னுடைய மகனின் ஆசிரியரின் இல்ல விழாவிற்கு சென்ற போது எடுத்த படத்தை தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி திமுகவினருடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூறி பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன் காரை முற்றுகையிட்டனர்.
அதிமுக நிர்வாகிகள்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்க்கோட்டையன் இல்ல விழாவுற்கு பத்திரிக்கை வைக்க வந்த போது பழனி நகர செயலாளர் முருகானந்தம் தங்களை புறகணிப்பதாகவும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளை கூறிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தம் விஸ்வநாதன்: உடனடியாக அங்கிருந்து நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிச் சென்றார். பழனி அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் குறித்து தவறான தகவலை அதிமுக பிரமுகரான அன்வர்தீன் என்பவரே தனது நண்பர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பியதால் இக்குழப்பம் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இது சாதாரண தகராறு அல்ல இரு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு இடையேயான நீண்ட கால மோதலாம்.
திண்டுக்கல் சீனிவாசன்: பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் ,அதிமுக 6 வார்டு கவுண்சிலர்களும் வார்டு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்களாக உள்ளனர். அதே நேரத்தில் ஒட்டன்சத்திரம் முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி மகனான ரவி மனோகரன் பழனி சட்டமன்ற வேட்பாளராக கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர். அதிமுக மதுரை மாநாட்டிற்கு பணம் செலவு செய்த ரவி மனோகரனுக்கு தற்போது மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவருடன் அதிமுக 25 வது வார்டு கவுன்சிலர் ராஜா முகமது மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் நத்தம் விசுவநாதனுக்கு நெருக்கமானவராக அன்வர் தீன் உள்ளார்.

என்ன காரணம்: திண்டுக்கல் அதிமுகவில் கடந்த கால கசப்புகளை மறந்து திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒன்றாக சேர்ந்து நிலையில் தற்போது இருவரிடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், கூறப்படுகிறது. மாஜி அமைச்சர்கள் இருவரும் சமாதானமாக இருந்தாலும், ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்ட வருவதாகப் பேசிக் கொள்கின்றனர். இதனால் தான் இந்த தேர்தலில் கூட அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படாமல் கூட்டணி கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications