தொழில் அதிபர்கள் வீடுகளில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ‘திடீர் விசிட்’.. பரபரத்த பழனி.. பின்னணி என்ன?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், முக்கியமான தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளுக்கு திடீரென வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பழனியில் உள்ள முக்கிய நகைக்கடை அதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்ட சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சேவை மற்றும் சரக்கு, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். இதனையடுத்து வரிஏய்ப்பு தொடர்பான சோதனை நடப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 25 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் ஆகியோர் செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரியானது முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, கட்டுமான நிறுவனங்களுக்கான வரி 12சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தபட்டுள்ள நிலையில் வரி செலுத்துவதில் தவறு செய்தால் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தவே வந்ததாகவும், எப்போதும் தொழிலதிபர்களை நேரில் அழைத்து அறிவுறுத்தப்படும் நிலையில் தற்போது அதிகாரிகளே நேரில் வந்து அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இது வழக்கமான நடைமுறைதான் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பழனி அருகே ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், மீண்டும் சோதனை என தகவல் பரவியதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications