திண்டுக்கல் அருகே பெண்ணின் ஆடையை உருவி.. 24 வருடம் கழித்து கலங்கிய போலீஸ்.. சென்னை நபருக்கும் தண்டனை
திண்டுக்கல்: திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில், கணவன் முன்னிலையிலேயே ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த இன்ஸ்பெக்டருக்கு, 24 வருடம் கழித்து தண்டனை தரப்பட்டுள்ளது.. அதேபோல, 13 வயது சிறுமியை சீரழித்த சென்னை இளைஞருக்கு, 6 வருடம் கழித்து தண்டனை தரப்பட்டுள்ளது. ஒரேநாளில் வெளியான தீர்ப்புகள், தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த விவசாய கூலித்தொழிலாளி.. திருட்டு வழக்கில் விசாரணைக்காக இவரையும், இவரது மனைவியையும், 20.2.2001ம் ஆண்டு செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் நள்ளிரவு அழைத்து சென்றனர்.

அப்போது போலீசார், கணவரின் முன்னிலையிலேயே அந்த பெண்ணின் உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்.. பிறகு, இருவரையும் லத்தியால் தாக்கி விசாரணை செய்ததாக தெரிகிறது. பிறகு மறுநாள் காலையில், கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என்று இருவரையுமே போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
உச்சக்கட்ட அவமானம்
இதனால் தம்பதி இருவரும் உச்சக்கட்ட அவமானமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.. ஒருகட்டத்தில் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.. ஆனால் ஊர் மக்கள் அவரை காப்பாற்றிவிட்டனர்.
இதற்கு பிறகு சில நாட்கள் கழித்து, கணவர் விஷம் குடித்துவிட்டார்.. இதைப்பார்த்து பதறிய அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 25.2.2001ல் கணவர் இறந்துவிட்டார்.. இவரது மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
ஆர்டிஓ அறிக்கை தாக்கல்
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி, காவலர்கள் வீர தேவர், சின்ன தேவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் 40க்கும் மேற்பட்டோரிடம், ஆர்டிஓ விசாரணை செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
அதிரடி தீர்ப்பு - தண்டனை - அபராதம்
தற்போது, வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீபா தீர்ப்பு அளித்துள்ளார்.. அதில், செம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கசாமி (77), போலீஸ்காரர்களாக இருந்த வீரதேவர் (68), சின்னதேவர் (69) ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கடந்த 24 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், தண்டனைக்குரிய அந்த 3 பேருமே இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை பாலியல் வழக்கு
அதேபோல, கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கிலும் தீர்ப்பு சென்னை இளைஞருக்கு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (19). கடந்த 2019ம் ஆண்டு 13 வயது சிறுமியை, பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், பிரகாசை மட்டும் கைது செய்தனர். அதேபோல, மற்றொரு நபரான 16 வயது சிறுவன் மீதான வழக்கு, சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்கண்ட இரு சம்பவங்களும் நடந்து வருடங்கள் ஆனாலும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்துள்ளது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications