அபிராமி அம்மன் சொத்து.. பல கோடி மதிப்பாமே! கிராம மக்கள் செய்த செயல்! திண்டுக்கல்லில் நெகிழ்ச்சி!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் 100 வருடத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் நிலத்தை தாங்களாகவே ஒப்படைக்க வந்த கிராம மக்கள், வாடகை செலுத்தி சட்டத்திற்கு உட்பட்டு தாங்கள் பயன்படுத்திக் கொள்வதாக மனு அளித்திருக்கின்றனர். இதை அடுத்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தின் புகழ்பெற்ற பல கோவில்கள் செயல்பட்டு வருகிறது. அந்த கோவில்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக மன்னர் காலங்களில் இருந்தே ஏராளமான நிலங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் விவசாய நிலங்களாகவும் வர்த்தக நிலங்களாகவும் இருக்கிறது.

அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அல்லது குத்தகை வாடகை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் அந்த நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது. தொடர்ந்து அது போன்ற நிலங்களை மீட்க தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தான் திண்டுக்கல்லிலும் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட அபிராமி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் உபகோவிலான திருக்காமேஸ்வரர் கோகிலாம்பாள் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் எங்கு உள்ளது என்பது குறித்து புதிதாக அமைக்கப்பட்ட கோயில் அறங்காவலர் குழு ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த வகையில் முள்ளிப்பாடி கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அங்கு 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவில் நிலத்தில் விவசாயம் மற்றும் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து இன்று முள்ளிப்பாடி கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அபிராமி அம்மன் கோயிலுக்கு கட்டுப்பட்ட இடத்தை கோயிலிடம் ஒப்படைப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க கோயில் நிர்வாகம் வழிவகை செய்து, வரும் காலங்களில் கோயில் நிலத்திற்கான வாடகை ஒப்பந்தம் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு வைத்தனர்.

இதனை அடுத்து அபிராமி அம்மன் கோயில் அறங்காவலர் குழு இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி முடிவை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது அபிராமி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு வீரக்குமார் மலைச்சாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக கிராம மக்களிடம் கேட்டபோது,"பல ஆண்டுகளாக இந்த நிலத்தில்தான் விவசாயம் மற்றும் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். சிலருக்கு மட்டுமே கோவில் நிலம் என்பது தெரியும். தற்போது இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலத்தை காலி செய்ய வேண்டும் என ஒப்படைத்து இருக்கிறது. கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல. அதே நேரத்தில் இந்த நிலத்தை விட்டாலும் எங்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் இந்த நிலத்திலேயே நாங்கள் வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயம் மற்றும் குடியிருப்புக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications