அரசு பஸ்ஸில்.. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில்.. அதுவும் அத்தனை பேர் முன்பு நடந்த அக்கப்போரு.. அடக்கடவுளே
திண்டுக்கல்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இதைப்பார்த்த பயணிகளும், பொதுமக்களும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டிலிருந்து, மதுரைக்கு அரசு ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன..
தாமதம்: இந்நிலையில், கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் ஏசி பஸ் டிரைவர், எப்போதுமே பஸ்ஸை சற்று தாமதமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.. இன்றும்கூட, ஏசி பஸ்ஸை லேட்டாக எடுத்திருக்கிறார் போலும்..

எனவே, அடுத்துள்ள சாதாரண அரசு பஸ் கண்டக்டரும் டிரைவரும், தட்டிக்கேட்டுள்ளனர். உங்களுடைய நேரத்திற்கு ஏன் ஏசி பஸ்ஸை எடுக்கவில்லை? என்று கேட்டிருக்கிறார்கள்.. இது வாக்குவாதமாக முற்றிவிட்டது.. ஏசி பஸ் டிரைவருக்கும், சாதாரண பஸ் டிரைவர், கண்டக்டருக்கும் தகராறு பலமாகிவிட்டது.
முற்றிய தகராறு: முதலில் வாய் தகராறு ஆரம்பித்து, இறுதியில் கைகலப்பாகிவிட்டது.. ஒருகட்டத்தில், 2 டிரைவர்களும் தகாத வார்த்தைகளால் திட்டிக கொண்டனர்.. ஒருவரையொருவர் மாறி மாறி, செருப்பை கழட்டி அடித்து கொண்டனர்.. இத்தனைக்கும், அந்த பஸ்களில், ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், கல்லூரி மாணவிகளும் உட்கார்ந்திருந்தனர்.
கெட்ட வார்த்தைகள்: 2 டிரைவர்களும் பேசிய கெட்ட வார்த்தைகளை கேட்டு, மொத்த பயணிகளும் முகம் சுழித்தனர்.. இவர்கள் தாக்கிக் கொண்டதையும் யாராலும் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை..
இந்த தகராறுதான் இணையத்தில் போட்டோ, வீடியோவாக வெளிவந்துள்ளது.. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்வகையில், இப்படி தகராறு நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன. பொது இடத்தில் தகாதமுறையில் நடக்க கூடாது என்று சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications