கொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்
பெண்ணிடம் கடன் வாங்கிக் கொண்டு அதை திருப்பித்தராமல் அதே பெண்ணை பலாத்காரம் செய்த படம் எடுத்து மிரட்டியதாக கொடைக்கானலில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்: கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை வத்தலக்குண்டுக்கு அழைத்துப்போய் ரூம் போட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ரோஜா என்பதாகும். இவர் கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் கவரிங் நகை விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வேலை செய்து வந்த சசி என்பவர் ரோஜாவிடம் பழகி வந்தார். அவ்வப்போது பணம் கைமாத்தாக வாங்கி வந்தார்.

ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியும் அதை திருப்பி தரவில்லையாம். தனக்கு பணம் தேவைப்படவே அதை சசியிடம் கேட்டார். அதற்கு சசி, வத்தலக்குண்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறவே அதை நம்பி போனார் ரோஜா.
வத்தலக்குண்டுவில் உள்ள ஹோட்டலில் ரூம் போட்ட சசி, அங்கே வந்த ரோஜாவை பலத்காரம் செய்ததோடு அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டார். அதை வைத்து ரோஜாவை மிரட்டத் தொடங்கியுள்ளார் சசி. முதலில் பயப்பட்ட ரோஜா, பின்னர் தைரியமாக காவல்நிலையத்தில் சசியைப் பற்றி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சசியை கைது செய்த காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை, பெண்ணை அவமதித்தல், தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications