யார் என்ன சொன்னால் என்ன? உதயநிதிக்கு தகுதி இருக்கு! என்ன வேணா ஆகலாம்.. அமைச்சர் ஐ.பெரியசாமி பளீர்
திண்டுக்கல்: தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக ஆகும் தகுதி இருக்கிறது, இளைஞர் அணி செயலாளர் எந்த உயரத்திற்கும் வரலாம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தொடர்ந்து பல வாரங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 19க்கு முன்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம், அல்லது அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறுகின்றனர் திமுகவினர்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை அமைச்சராக கோரிக்கை வலுத்திருக்கிறது பழுக்கவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக ஆகும் தகுதி இருக்கிறது, இளைஞர் அணி செயலாளர் எந்த உயரத்திற்கும் வரலாம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வார்டுகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், ஊரக மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின் மேடையில் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது,” ஸ்டாலினின் செயல்பாடுகளை, செயல் திட்டங்களாக மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக தம்பி உதயநிதி உழைத்துக் கொண்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் தகுதி இருக்கிறது. எந்த இடத்திற்கும் வருவதற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறது. இளைஞர் அணி செயலாளர் எந்த உயரத்திற்கும் வரலாம்.
இந்த இயக்கத்தை காப்பாற்றுகிற கடைசி தொண்டன் இருக்கிற வரை அதனை ஏற்றுக் கொள்ளும் இயக்கம் திமுக. சிலர் தங்களை பெருமைப்படுத்திக் (பீத்தி) கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வந்தோம், போனோம். அங்கு ஆட்கள் யார் உட்கார இல்லை. அதனால் சென்றீர்கள். எந்த அளவுக்கு உழைத்திருந்தார்கள் என்று பார்த்தால் பல ஆண்டுகளாக இளைஞர் அணி, விளையாட்டுத்துறை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
எந்த திட்டமாக இருந்தாலும், அதனை ஆய்வு செய்து அதனை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று அதனை ஏழை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. ஒரு இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நமது கொள்கையின் படி செயல்பட வேண்டும். தனிமனித செயல்பாட்டால் இயக்கம் முன்னேற்றம் அடையவில்லை. அனைவரின் கூட்டு முயற்சியாலே முன்னேற்றம் அடைந்துள்ளது. வார்டுகளில் காங்கிரசை நாம் தான் வெற்றி பெற வைத்தோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் வெற்றி பெற வைத்தோம். கழகத்தில் அனைவரும் உழைத்திருக்கிறீர்கள்" என தெரிவித்தார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications