அரசு பள்ளி வகுப்பறை.. திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. சில நொடிகளில் உயிர்தப்பிய மாணவிகள்!
திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் அரசு பள்ளி வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மாணவிகள் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலகட்டம் என்பதால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கான வகுப்பறையில் சுமார் 20 மாணவிகளுக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது

மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
அப்போது பள்ளியின் மேற்கூரை துகள்கள் திடீரென துண்டு துண்டாக விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியே தலை தெறிக்க வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த சில நிமிடங்களில் வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் மாணவிகள் அமரும் நாற்காலியில் விழுந்தது. இது மாணவிகளை தூக்கிவாரி போட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்ததால் அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் வெளியே வர கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்த செய்தியை அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

பழமையான கட்டிடங்கள்
இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பழமையான கட்டிடங்கள் ஆகும். பராமரிப்பு இன்றி அனைத்து கட்டிடங்களும் விரிசல் விட்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவில் கட்டிடங்கள் உள்ளது. தற்போது மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் மேலும் கட்டிடங்கள் ஆபத்தை உருவாக்கக் கூடும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
ஆகவே மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். பழமையான கட்டிடங்களில் மேலும் மாணவிகளை அமர வைக்காமல் மாற்று இடத்தில் அமர வைத்து வகுப்புகள் நடத்தவேண்டும். வரும் நவம்பர் 1-ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய சிக்கல்.. இனி என்ன செய்ய வேண்டும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications