துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட.. துபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியருக்கு ஷாக் தண்டனை

Google Oneindia Tamil News

துபாய்: துபாய் விமான நிலையத்தில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் 2 மாம்பழங்களைத் திருடி தின்ற குற்றத்திற்காக நாடு கடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று துபாய், சர்வதேச விமான நிலையமான துபாய் தான் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் முக்கிய விமான வழித்தடமாக உள்ளது.

இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள். இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 27 வயது இந்தியர் ஒருவர் வேலை செய்து வந்தார். இவருக்கு. கடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள் தண்ணீர்த் தாகம். எடுத்திருக்கிறது. ஆனால் பக்கத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை.

தாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ. 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க!தாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ. 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க!

மாம்பழம் சாப்பிட்டார்

மாம்பழம் சாப்பிட்டார்

அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் போய்க்கொண்டு இருந்தது அதில் சென்ற ஒரு பாக்ஸை திறந்த அவர், தண்ணீர் இருக்கிறதா என்று தேடி உள்ளார். ஆனால் தண்ணீர் இல்லை மாம்பழங்கள் இருந்த.இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர் திடீரென இரண்டு மாம்பழங்களை எடுத்துத் தின்றார். பிறகு வழக்கம் போல அவர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்தியர் கைது

இந்தியர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு துபாய் போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். சிசிடிவியை பார்த்து ஆராய்ந்தததில் அதிகாரிகளுக்கு மாம்பழம் சாப்பிட்ட கதை தெரியவந்தது. இந்நிலையில் அவரது அறையில் அறையில் திருட்டுப் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என தேடினர். ஏதும் கிடைக்கவில்லை. எனினும் மாம்பழம் திருடிய குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

5000 திர்ஹம் அபராதம்

5000 திர்ஹம் அபராதம்

கைது செய்யப்பட்ட இந்தியர் , தண்ணீர் தாகம் எடுத்ததால் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங்களை மட்டுமே எடுத்து சாப்பிட்டதாக தெரிவித்தார். இந்த வழக்கில் நேற்று துபாய் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மாம்பழம் திருடிய இந்தியருக்கு அபராதமாக 5000 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் பின்னர் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

தண்ணீர் தாகம் எடுத்ததால் இரண்டு மாம்பழத்தை திருடிய இந்தியரை துபாய் நீதிமன்றம் நாடு கடத்த உத்தரவிட்ட சம்பவம் துபாயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
dubai court ordered deportation of Indian airport worker who held for stealing two mangoes from the baggage of a passenger
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X