நியூசிலாந்திடம் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா.. இந்தியா உஷாராக இருக்க வேண்டும்: ஜாகீர்கான் எச்சரிக்கை
துபாய்: கேன் வில்லியம்சனின் நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இப்போது நியூசிலாந்துடன் ஒரு "டூ-ஆர்-டை" என்கவுன்டரில் களமிறங்கவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ள அந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும். நியூசிலாந்துக்கும் அதே நிலைமைதான்.

ஜாகீர் கான் டிப்ஸ்
இந்த நிலையில்தான், ஜாகீர் கான் சில விஷயங்களை ஷேர் செய்துள்ளார். இதோ அவர் கூறியதாவது: "இந்தியா தங்கள் திறமைக்கு ஏற்றவாறு விளையாடினால், எந்த அணியும் எதிர்த்து நிற்பது எளிதான விஷயம் இல்லை. இதை நாம் அனைவரும் அறிவோம்.

வேகமாக வாங்க
ஒரு அணி வெற்றி பாதைக்கு வேகமாக வருவது எப்போதும் முக்கியம், குறிப்பாக உலகக் கோப்பை தொடரில் அது நடக்க வேண்டும். இந்த முறை இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ஆனால், மேலும் தாமதமாக வெற்றிப் பாதைக்கு திரும்ப நினைக்க கூடாது. இப்போதே அதைச் செய்ய உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டம் வாழ்வா, சாவா என்பதை போன்ற போட்டி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நியூசிலாந்து போராடி தோற்றது
ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது. ஆனால் நியூசிலாந்து அந்த ஆட்டத்தில் போராடிதான் தோற்றது. இந்த விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பந்து வீச்சு, பீல்டிங்கை பாருங்க
ஒவ்வொரு போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று மிகுந்த உற்சாகத்துடன் இருக்க விரும்புகிறது என்பது நிச்சயம். ஆம், பாகிஸ்தான் டீம் ரிசல்ட் அவர்களின் நினைத்தது போல செல்லவில்லை, ஆனால் அவர்கள் காட்டிய போராட்டம் அருமையானது. அவர்கள் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்கவில்லை, ஆனால் அவர்கள் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் எடுத்த முயற்சி, அவர்களின் போராட்ட குணத்தை காட்டியது. இந்தியா இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.

முக்கிய போட்டி
நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தொடக்க ஆட்டங்களில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மோத உள்ளன. இந்தியாவை பாகிஸ்தான் டீம் எளிதாக வீழ்த்தியது. ஆனால் நியூசிலாந்து நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானை தங்கள் பந்து வீச்சில் கட்டிப்போட்டது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications