ஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
ஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்-வீடியோ
ஈரோடு: ஈரோடு - ஊராட்சிக்கோட்டை மின் திட்ட தடுப்பணையின், 17வது மதகின் கதவணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு அருகே ஊராட்சிக்கோட்டை மின் திட்ட தடுப்பணையில், காவிரி ஆற்றில் கதவணை ஷட்டர் உடைந்துள்ளது. அங்கு ஏழு இடங்களில் கதவணைகள் உள்ளன.

ஒவ்வொரு கதவணையையும், அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். கரையோரப் பகுதிகளில் மற்றும், தாழ்வான பகுதிகளில் யாரும் குடியிருக்கவில்லை என்ற போதிலும், யாரும் அந்த இடத்திற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டு இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கதவணைகளை பலப்படுத்தியிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
கதவணை உடைந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications