Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால்.. பொங்கல் பரிசு ரூ.1000 அறிவிப்பு வராது? இருந்த கடைசி வாய்ப்பும் போச்சு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும்.

erode east pongal 2025 ration shop tamil nadu 2025

பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவு மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம்.

பொங்கல் பரிசு தொடர்பான முக்கியமான அறிவிப்பை தமிழக வெளியிட்டு உள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர்.

பொங்கல் பரிசு விமர்சனங்கள்:

பொதுவாக பொங்கலுக்கு 21 பொருட்கள் வழங்கப்படும். அதேபோல் ரூ.1000 வழங்கப்படும். ஆனால் நிதி நிலவரங்களை காரணம் காட்டி இந்த முறை தமிழக அரசு ரூ.1000 பணம் வழங்கவில்லை.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளதாம். எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக பயன்படுத்த போகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது. அந்த தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இதை பயன்படுத்தலாம். மக்கள் இடையே இது எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாம்.

ஈரோடு தேர்தல்:

ஆனால் இப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அதாவது விமர்சனங்கள் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூ. 1000 அறிவிப்பார்.. சட்டசபை கூட்டத்தொடரிலேயே இதை பற்றி அறிவிப்பார் என்று தகவல்கள் வந்தன.

ஆனால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அப்படியே அறிவித்தாலும் ஈரோட்டிற்கு பரிசு அறிவிக்கப்படாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரூபாய் 1000 ஏன் இல்லை:

பொங்கல் பரிசுத்தொகை இந்த முறை குறைக்கப்பட்டு உள்ளது. அதே போல் ரொக்கம் ரூபாய் 1000 வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து உள்ளது. ஆனால் மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடி அதிகம் உள்ளது.

இதை சமாளிக்கவே தமிழ்நாடு அரசு இந்த முறை பொங்கலுக்கு ரொக்க பரிசு கொடுக்காமல் போனது என்று தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+