சார் அடிக்காதீங்க.. தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த இளைஞர்.. வெளியே இழுத்து வெளுத்த போலீஸ்
ஈரோடு: போலீஸ் தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த வாலிபரை அழைத்து வந்து அடித்து துரத்திய காட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதையும் மீறி நடமாடுவோரை போலீஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வாகன பதிவு எண்ணை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த முறையும் அவர்கள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்புகின்றனர்.

தடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக மாநில போலீசார் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர். ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்ததை கண்ட போலீசார் தங்களின் கைகளில் வைத்திருந்த தடியால் அடித்துத் துரத்தினர்.

நுழைவு
இந்த நிலையில் சாம்ராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது ஒரு வாலிபர் தனது ஸ்கூட்டரின் அருகே நின்றதைக் கண்ட போலீசார் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம் என தடியால் அடித்ததால் அடிக்கு பயந்து வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்தார்.

தடியடி
அப்போது வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் போலீசார் இதை கண்டு அந்த வாலிபரிடம் யார் வீட்டில் நுழைந்தாய் வெளியே வா என அழைத்து மீண்டும் அடித்துத் துரத்தி அடித்தனர். அப்போது அந்த வாலிபர் தடியடிக்கு பயந்து கொண்டு மீண்டும் தப்பி ஓடினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

தீவிரம்
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications