Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு பெண்களுக்கு சந்தோஷம்: மாவு அரைக்கும் கிரைண்டர் மானியத்தில் 50% வரை சலுகை! அரசின் மாஸ் திட்டம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு சூப்பர் திட்டம் ஒன்றை சமீபத்தில் கொண்டு வந்திருந்தது... இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Grinder Subsidy Maavu AraikkumThozhil Erode 50 Percent Subsidy Erode Women 50

தமிழக அரசு பெண்களுக்காக சூப்பர் திட்டம்

அமைச்சர் வெளியிட்டிருந்த அறிவிப்புகளில், பெண்களை அதிகமாக ஈர்த்தது கிரைண்டர் குறித்த அறிவிப்பாகும்.. அதாவது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும்.

50 சதவீதம் மானியம்

இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 2000 மகளிருக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்

தமிழக அரசை பொறுத்தவரை, பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மானியத்தொகை வழங்கி வருகிறது.. சுயதொழில் தொடங்க ரூ. 50,000 மானியம், மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 18,000 நிதி உதவி, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் மற்றும் 50% மானியம் போன்ற திட்டங்கள் உள்ளன.

கிரைண்டருக்கு 5 ஆயிரம்

எனினும், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரைண்டருக்கு 5 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈரோடு பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்

அதன்படி நடப்பு 2025- 2026ம் நிதியாண்டுக்காக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின் 6வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424- 2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+