அடர்த்தியான தலைமுடிக்கு "முயல் ரத்தம் ஹேர் ஆயில்".. இந்த எண்ணெய் நல்லதா? ஈரோட்டில் நுழைந்த ஆபீசர்ஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கடைகளில், திடீரென மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தலைமுடி உதிர்வு, வறண்ட தலைமுடி, இளம்வயதில் நரைமுடி என்பதெல்லாம் இன்று மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறிவிட்டது.. தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மரபணு, ஹார்மோன்கள், ஊட்டச்சத்து, வயது, மன அழுத்தம், உட்கொள்ளும் சில மருத்துகள் போன்ற எண்ணற்ற காரணங்கள் உள்ளன.

ஆனால், இவைகள் குறித்தெல்லாம் ஆராயாமல், பொத்தாம் பொதுவான வைத்திய முறைகளை பயன்படுத்துவதாலேயே, மிச்சம் உள்ள தலைமுடியும உதிர்ந்துவிடுகின்றன. அந்தவகையில், சமீபகாலமாக முயல் ரத்தம் ஹேர் ஆயில் ஃபேமஸ் ஆகி வருகிறது.. இந்த முயல் ரத்தத்தில் தயாரிக்கப்படும் எண்ணெய்யை தலைக்கு தேய்த்தால், நன்றாக முடி வளரும், கருகருவென தலைமுடி மாறும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஹேர் ஆயில்: முயல் ரத்தம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், எந்த அளவுக்கு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று தெரியவில்லை.. இதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இதுவரை சொல்லப்படவில்லை..
ஆனால், இந்த எண்ணெய்யை பயன்படுத்தும்போது தொற்று நோய்கள், அலர்ஜி, தோல் எரிச்சல், காயங்கள் என பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்கிறார்கள். ஏனென்றால், இது விலங்கின் ரத்தம் என்பதால், அதில் பலவிதமான நோய்க்கிருமிகள் இருக்கலாம்.
கிருமிகள்: இந்த கிருமிகள், சருமத்தில் பட்டு, உடலுக்குள் நுழைந்து தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், முயல் ரத்தத்தில் உள்ள புரதங்கள் உள்ளிட்ட சில பொருட்களால், தோல் சிவந்து போதல், வீக்கம், அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படலாம் என்பதால், இதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
மற்றொருபுறம், சித்த மருத்துவத்தில் முயல் ரத்த எண்ணெய், ஆஸ்துமா போன்ற சுவாச நிலைமைகளுக்கு பயனளிக்கும் விதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. முயலின் ரத்தத்தில் கிட்டதட்ட 293 அமினோ அமிலங்கள் உள்ளதால், தலைமுடியின் வளர்ச்சியை அபரிமிதமாக மாற்றும் என்கிறார்கள். சிஸ்டைன், லைசின், மித்தோனின் ஆகிய மூன்று அமினோ அமிலங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பதால், இந்த மூன்றுமே முயல் ரத்தத்தில் நிறைவாக உள்ளதாக சொல்கிறார்கள்.
அதிரடி சோதனை: இப்படி முயல் ரத்த எண்ணெய்யில் இருவேறு மாறுபட்ட கோணங்கள் நிலவி கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், ஈரோட்டில் விற்பனை செய்யப்பட்ட முயல் ரத்தம் ஹேர் ஆயிலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கடைகளில் முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பந்தப்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்..
இந்த அதிரடி சோதனையின் முடிவில், 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, முயல் ரத்தம் கலந்த, 7 ஹேர் ஆயில் பாட்டில்களை மருந்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்ததுடன், அங்கிருந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்தனர். அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்ய, இந்த கடைகளுக்கு லைசென்ஸ் இல்லை என்பதும் இந்த சோதனையில் தெரியவந்துள்ளது.
லேப் டெஸ்ட்: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது "இந்த கடைகளில் எண்ணெய் விற்பதற்கான லைசென்ஸ் இல்லை. ஹேர் ஆயில் ஒரு அழகுசாதனப் பொருள் ஆகும். ஆனால், இது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தில் வருகிறது. ஹேர் ஆயில்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம் கட்டாயம். பறிமுதல் செய்யப்பட்ட முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயிலை ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆய்வக அறிக்கையின் அடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications