மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்
ஈரோடு: அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பதுபோல், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என்று அதிமுக ஜெ. பேரவை இணைச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை தொண்டனாக இருப்பேன்,பொறுப்பில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், முதல்வர், துணை முதல்வர் தகுந்த மரியாதை தருகின்றனர்.

சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன் என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், நான் வேறு இயக்கத்திற்கு செல்வதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று கூறிய அவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை முதல்வரிடம் கொடுத்து விட்டேன், இது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் சூசகமாக கூறியிருந்தார். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில், அதிமுகவுக்கு நெருக்கடி முற்றிவருவதாக கூறப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications