விவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி
ஈரோடு : ஆளுநர் பதவியை விட விவசாயம் பார்க்கத்தான் தான் ஆர்வமாய் இருந்ததாக கேரளா ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநில ஆளுநருமான சதாசிவம் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது மலரும் நினைவுகள் குறித்தும், மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் சொந்த ஊரான ஈரோட்டில் பேசியுள்ளார்.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் சதாசிவம் பேசியதாவது:

சாதாரண குடும்பதை சேர்ந்தவன்
"நான் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஈரோடு மாவட்டம் சிங்கம் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்தேன். கல்லூரி படிப்பை ஈரோடு சி.எம்.சி. கல்லூரியில் படித்தேன். சட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முடித்தேன்.

மகிழ்ச்சி அளித்த வாழ்த்து
நாம் எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும். நாம் வந்த வழியை திரும்பி பார்க்க வேண்டும். நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முதல்நாளில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது

பெண்களுக்கு அறிவுரை
உங்களில் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்தால் கண்டிப்பாக பெரிய பதவிக்கு வர முடியும். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே பெண்கள், தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்லும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆளுநர் சதாசிவம் விருப்பம்
நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். அது பற்றி அறிவித்தும் இருந்தேன்.

முதலில் தயங்கினேன்
அப்போது கேரள ஆளுநர் பதவி எனக்கு வந்தது. முதலில் கவர்னர் பதவியை ஏற்க தயங்கினேன். பின்னர் என் நலம் விரும்பிகள் உங்களை போல் பலர் ஓய்வு பெற்ற பிறகு ஆளுநர் ஆகி உள்ளனர். நீங்களும் பதவி ஏற்கலாம் என தெரிவித்தனர். அதன்படி கேரள ஆளுநராக மாறினேன்" இவ்வாறு கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications