மீண்டும் உரசல்.. “மற்றவர்கள்” முடிவு செய்ய முடியாது.. சீண்டிய அதிமுக சீனியர்! பேரை கூட சொல்லலையே!
ஈரோடு : அதிமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்கிற ரீதியில் அண்ணாமலை பேசியது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இதனால், பாஜக அதிமுக கூட்டணி பிளவு பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன. இதுகுறித்துப் பேசியுள்ள அதிமுக சீனியர் தலைவர் செங்கோட்டையன், கூட்டணியை அதிமுக தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த கட்சிகள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும். ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்கக் கூடாது என நினைப்பவர்கள் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள்." என ஆவேசமாகப் பேசினார்.

அண்ணாமலை - அதிமுக மோதல் : அண்ணாமலையின் இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருப்பது அதிமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடராதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டபோது தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இதனால் பாஜக உடனான கூட்டணிக்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூறமுடியாது." என்றார்.
மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் அதிக சீட் பெறுவதற்காக அதிமுகவை பயமுறுத்த அண்ணாமலை அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், "அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. கூட்டணியை பொருத்தவரை அதிமுக தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை." எனக் கூறினார்.
அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பாஜக உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது என்றார் செங்கோட்டையன். மேலும், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications