Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலி பசித்தாலும் புல்லை தின்னாது! இறங்கி போன எடப்பாடி.. ஏன்? செம ட்விஸ்ட்! அட அண்ணாமலை வேற இருக்காரே

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பன்னீர்செல்வத்துடன் இறங்கி போகவில்லை என்றால் அது எடப்பாடிக்குதான் சிக்கல், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார். விரைவில் இங்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிளான் என்ன என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பன்னீர்செல்வத்துடன் இறங்கி போகவில்லை என்றால் அது எடப்பாடிக்குதான் சிக்கல். மற்ற கட்சிகள் அதிமுகவின் வாக்கு வங்கியை எடுத்துக்கொள்ளும். இதை தடுக்க ஓ பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி சமாதானமாக செல்ல வேண்டும்.. இதற்கு முன்னர் ஆளுனர் கொடுத்த தேநீர் விருந்திற்கு எடப்பாடி செல்லவில்லை. நானும் பன்னீரும் சரிசமம் இல்லை என்று எடப்பாடி போகவில்லை. குஜராத்தில் முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கும் எடப்பாடி செல்லவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஆளுநர் கொடுத்த பொங்கல் விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் வருவது தெரிந்தும் ஏன் எடப்பாடி சென்றார். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள்.. இந்த புலி பசித்து புல்லை தின்றுவிட்டதா? இப்போ என்ன அவசியம் வந்துவிட்டது எடப்பாடிக்கு?

பேட்டி

பேட்டி

இதற்கெல்லாம் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏன் இப்போது ஆளுநரின் பொங்கல் விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் இருக்கும் போதே எடப்பாடி செல்ல வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. ஈரோட்டில் ஓ பன்னீர்செல்வத்திடம் இறங்கி செல்ல வேண்டும். இல்லையென்றால் அப்படியே ஈரோடு கிழக்கை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்டு விலகி நிற்க வேண்டும். அதிமுக தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியாது. தீர்ப்பு எப்படி இருக்க போகிறது, அதிமுகவில் என்ன நடக்க போகிறது என்று தெரியாது. அதிமுகவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பிளவு தோற்றுப்போன கட்சியில் உள்ள பிளவு. எம்ஜிஆர் இறந்த பின் ஏற்பட்ட பிளவு அல்ல இது. அப்போது அதிமுக ஆளும் கட்சி.

அதிமுக

அதிமுக

இப்போது அதிமுக தோல்வி அடைந்த கட்சி. அதிமுக பிளவு எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இன்னொரு பக்கம் பாஜக தனித்து போட்டியிடுமா என்று பார்க்க வேண்டும். கேரள பாஜக சுரேந்திரன் பத்தினம்திட்டாவில் இடைத்தேர்தலில் தனியாக நின்று 28 சதவிகித வாக்குகளை வென்றார். 10 சதவிகித வாக்குகள் இருந்த பாஜகவை அந்த தொகுதியில் 28 சதவிகிதம் வாங்க வைத்தார் சுரேந்தர். இந்த இடைத்தேர்தல் மூலம் பாஜகவிற்கு பொதுத்தேர்தலில் கேரளாவில் நல்ல வாக்கு சதவிகிதம் கிடைத்தது. இடைத்தேர்தல் மறைமுகமாக பொதுத்தேர்தலில் உதவியது. அங்கே சுரேந்திரன் செய்ததை இங்கே அண்ணாமலை செய்ய பார்க்க வேண்டும். சுரேந்திரன் போலவே இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு ஸ்டார் வேட்பாளராக குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை வென்றால் அது பாஜகவிற்கு பொதுத்தேர்தலில் பலம் சேர்க்கும். பாஜக தனியாக நின்று 2-3 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை வென்றால் பாஜக எமர்ஜ் ஆகிவிடும். அண்ணாமலை பாஜகவின் வலிமையை இதன் மூலம் நிரூபிக்க முடியும்.

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ்நாட்டில் எடப்பாடிக்கு பெரிதாக வாக்கு சதவிகிதம் இல்லை. அவரிடம் 15 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளது. இடைத்தேர்தல்களில் பல முறை தோல்வி அடைந்த கட்சிதான் அதிமுக. இடைத்தேர்தலில் அதிமுக வெல்ல ஒற்றை தலைமை அவசியம் என்பதற்கு சான்று எதுவும் உள்ளதா? ஒற்றை தலைமைக்கு கீழ் அக்கட்சி பல முறை தோல்வி அடைந்து இருக்கிறதே? ஜெயலலிதா ஒற்றை தலைமையாக இருந்த போது அந்த கட்சி தோல்வி அடையவில்லையா? ஒற்றை தலைமை இருந்தால் அதிமுக வென்றுவிடும் என்று எப்படி சொல்ல முடியும்? அதிமுகவில் எல்லா தலைவர்களையும் ஒன்று சேர்த்து இருந்தாலே தானே அந்த கட்சிக்கு நல்லது. அப்போது தானே தேர்தலில் அதிமுக வெல்ல முடியும். எடப்பாடி இதை உணர வேண்டாமா?, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+