ஒசூரில் மர்மநபர்கள் அட்டகாசம்.. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து உடைப்பு

Subscribe to Oneindia Tamil

ஒசூர்: ஒசூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால், அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒசூர் ராம்நகரில் வசிப்பவர்களின் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வாடகை ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றையும் அவற்றின் கண்ணாடிகளையும் மர்மநபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.

இரு நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ராம்நகர் பகுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர், இரும்பு தடிகள் மற்றும் கற்களை கொண்டு 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ளனர். இது தொடர்பாக சேதமடைந்த வாகன உரிமையாளர்கள் கூறுகையில், வழக்கமாக எந்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவோமோ அதே இடத்தில் தான் நிறுத்தியிருந்தோம்.

People in Hosur are afraid..Vehicles that were beaten by the mysterious people at night

காலையில் வெளியே வந்து பார்த்தால் வாகனங்கள் மற்றும் அவற்றின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் டூவீலர் ஆட்டோ என 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் ராம்நகரில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒசூர் நகராட்சியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு வளையத்திற்குள் தங்களது பகுதியை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+