ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓயாமல் வழியும் ரத்தம்.. 10 வயது மகனை கருணை கொலை கேட்டு கோர்ட்டுக்கு வந்த தாய்.. திடீரென நடந்த ஷாக்

10 வயது மகனுக்கு கருணை கொலை கேட்டு கோர்ட்டுக்கு வந்தார் தாய்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: 10 வயது பையனை கருணை கொலைக்கு அனுமதி கேட்க கோர்ட்டுக்கு அழைத்து வந்தார் அவனது அம்மா.. ஆனால், அதன்பிறகு நடந்த துயர சம்பவம் ஆந்திர மக்களையே நிலைகுலைய வைத்துவிட்டது.

Recommended Video

    கண், வாய் வழியே ரத்தம் வழிய… தாயின் மடியில் உயிர் விட்ட மகன்!

    சித்தூர் மாவட்டத்தில் பிரிஜிபள்ளி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி மணி - அருணா.. இவர்களின் 10 வயது மகன்தான் ஹர்ஷவர்தன்... அரசு ஆரம்ப பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

    4 வருஷங்களுக்கு முன்பு, வீட்டின் மேல்மாடியில் சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டான்..

    நீ தற்கொலை செய்து கொள்.. இல்லாட்டி மகளை ஆணவக் கொலை செய்வதாக பெற்றோர் மிரட்டல்.. காதலன் தீக்குளிப்பு!நீ தற்கொலை செய்து கொள்.. இல்லாட்டி மகளை ஆணவக் கொலை செய்வதாக பெற்றோர் மிரட்டல்.. காதலன் தீக்குளிப்பு!

    பள்ளி

    பள்ளி

    இதில் பலத்த காயமேற்பட்டது.. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையும் தந்தனர்.. உடல்நிலையும் தேறியது.. அதனால் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான்.. ஸ்கூலுக்கும் சென்று வந்தான். ஆனால், ஒருநாள் திடீரென அவனுடைய கண்கள், வாய், மூக்கு, ஆசனவாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியானது..

     ஆஸ்பத்திரி

    ஆஸ்பத்திரி

    இதனால் பதறி போன அவனது பெற்றோர், அவனை வேலூர் உட்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு தூக்கி அலைந்தார்கள்.. எங்குமே சிறுவனை குணப்படுத்த முடியவில்லை.. உடலிலும் மாற்றம் ஏற்படவில்லை.. தினம் தினம் குழந்தையின் உடம்பில் ரத்தம் கொட்டுவதை பார்த்து, அப்பா மணிக்கு மனநிலையே பாதித்துவிட்டது.. அதனால் அவர் எங்கேயோ போய்விட்டார்.. குழந்தையை இப்படி வைத்து கொண்டு அவரையும் அருணாவால் தேட முடியவில்லை..

    மகன்

    மகன்

    இதனால் அவரது நிலைமை தினம் தினம் போராட்டமாக இருந்தது... இதற்கு மேல் தன்னால் எதுவுமே செய்ய முடியாது, அதனால் மகனை கருணை கொலை செய்யவும் முடிவுக்கு வந்தார்.. அதனால், அதற்கான அனுமதி கேட்டு, புங்கனூர் கோர்ட்டுக்கு நேற்று மகனை அழைத்து வந்தார்.. ஆனால், இப்போது லாக்டவுன் என்பதால், கோர்ட்டுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

    மரணம்

    மரணம்

    இதனால் ஏமாற்றம் அடைந்த அருணா, மறுபடியும் ஒரு ஆட்டோவை பிடித்து மகனை வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.. ஆனால் ஆட்டோவிலேயே அந்த குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது.. கருணை கொலை கேட்டு, கோர்ட் வரை வந்தாலும், மகனின் சடலத்தை கண்டு அருணா கதறி கதறி அழுதது காண்போரையே நிலைகுலைய வைத்து விட்டது..!

    English summary
    10 year old boy Mercy Petition case issue in Andhra Pradesh Court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X