பாட்டி இந்திராவின் கோட்டை! லோக்சபா தேர்தலில் தென்மாநிலத்தில் பிரியங்கா காந்தி போட்டி?தொகுதி ரெடி
ஹைதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாட்டி இந்திரா காந்தி, தாய் சோனியா காந்தி ஆகியோரின் பாணியில் ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி தென்மாநிலத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பாட்டி இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் 43 ஆண்டுகள் கழித்து பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
காங்கிரஸ்.. இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த கட்சி. சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தது முதல் இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பெரியளவில் சறுக்கலை சந்தித்துள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தலிலில் மத்தியில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் எழுச்சி பெறவில்லை. மேலும் இந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆம்ஆத்மி, பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பொறுப்பு தற்போது முழுக்க முழுக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரிடம் தான் உள்ளது. சோனியா காந்திக்கு அவ்வப்போது உடல்நல பிரச்சனையை எதிர்கொள்வதால் தான் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரின் கையில் தான் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்ய வேண்டிய பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியுமே நன்கு உணர்ந்துள்ளனர். இதனால் தான் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். அதோடு பல ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருந்து விலகி பிரியங்கா காந்தியும் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பொறுப்பை ஏற்று அங்கு அவர் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்தார். தற்போது கர்நாடகா தேர்தலில் அவர் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும் கடந்த ஆண்டு பஞ்சாப், குஜராத், கோவா, உத்தர பிரதேசம், நடந்த 5 மாநில தேர்தல், இந்த ஆண்டு தெடாக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரியங்கா காந்தி தென்மாநிலத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட வைக்க கட்சி மேலிடம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
அதன்படி இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் பேத்திர பிரியங்கா காந்தியை களமிறக்க வாய்ப்புள்ள தகவல் கசிந்துள்ளது. அதாவது தெலங்கானா மாநிலம் மேடக் நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க அந்த கட்சி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் கடந்த 1980ம் ஆண்டு அவரது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதாவது எமர்ஜென்சியை அறிவித்த நிலையில் இந்திரா காந்தி மீது மக்கள் கோபமடைந்தனர். இதையடுத்து எமர்ஜென்சிக்கு பிறகு 1977ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்த பிரதேசம் ரேபரேலியில் போட்டியிட்டு இந்திரா காந்தி தோற்றார். இதனால் இந்திரா காந்தியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து 1978 ல் கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டு அரசியலில் மறுவாழ்வு பெற்றார். இதையடுத்து கடந்த 1980ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க இந்திரா காந்தி தேர்வு செய்த தொகுதி தான் தெலங்கனாாவின் மேடக். இதில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். மேடக் அவரது கோட்டையானது.
இந்நிலையில் தான் பாட்டி இந்திரா காந்தி பாணியில் மேடக்கில் பிரியங்கா காந்தியை களமிறக்குவது பற்றி கட்சி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதன் மூலம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் இந்த முடிவில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கனாவில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தால் அது சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சிக்கு கைக்கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு சிறிய தயக்கம் உள்ளது. ஏனென்றால் மேடக் என்பது தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் சொந்த மாவட்டம். இங்கு அவரத பிஆர்எஸ் கட்சி தான் செல்வாக்காக உள்ளது. மேலும் 2009 முதல் தற்போது வரை இங்கு பிஆர்எஸ் கட்சியினர் தான் வெற்றி பெற்று வருகின்றனர். 2014ல் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றார். இத்தகைய சூழலில் பிரியங்கா காந்தி ஒருவேளை மேடக் தொகுதியில் களமிறங்கினால் அவருக்கு அக்னி பரீட்சையாக தான் இருக்கும். இதனை காங்கிரஸ் எப்படி சமாளிக்கும் என்பது கேள்வியாக உள்ளது. இதற்கான விடையை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
*******
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications