மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி.. யாருமே பார்க்காத பரிதாபம்
கரண்ட் தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: மின்சாரம் தாக்கி ஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளான். கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை விளக்கு கம்பத்தை பிடித்து கொண்டே சிறுவன் அசைவின்றி நிற்பது காண்போரை கலங்கடித்து வருகிறது.
ஹைதராபாத்துக்கு அருகே பன்ட்லகுடா என்ற இடத்தில் பெப்பி சிட்டி என்ற ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மென்ட்க்கு உள்ளேயே சிறுவர்களுக்கு ஒரு பூங்காவும் உள்ளது.
அங்குதான் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுசம்பந்தமான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

மஞ்சள் டீ ஷர்ட்
அதில், வீடுகளின் எதிரே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விளையாடி கொண்டிருக்கும் மஞ்சள் டீ ஷர்ட் போட்ட ஒரு சிறுவன் ஓடிவந்து, வீட்டின் முன்னால் இருந்த ஒரு கரண்ட் கம்பத்தை தொடுகிறான்.

யாரும் கவனிக்கவில்லை
ஆனால் எந்தவித அசைவும் இல்லாமல் அப்படியே நிற்கிறான். அவனது ஒரு கை மட்டும் கம்பத்தில் பிடித்தபடியே இருக்கிறது. அந்த பக்கம் நிறைய பேர் போய்வந்து கொண்டிருக்கிறார்கள். யாருமே இதை கவனிக்கவில்லை. அந்த சிறுவனுக்கு அருகிலேயே மற்ற பிள்ளைகளும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிறுவன் விளையாடுகிறான் என அவர்களும் நினைத்து உள்ளனர்.

சென்னை சிறுவன்
பின்னர் சிறுவனை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பிறகு இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை தொடங்கியது. உயிரிழந்த 6 வயது சிறுவன் சென்னையை சேர்ந்தவன் என்றும் அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-வது படித்து வருகிறான் என்பதும் தெரியவந்தது. மேலும் அவனது தந்தை ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
இது சம்பந்தமான விசாரணை தொடர்வதுடன், அலட்சிய போக்குடன் செயல்பட்ட அக்குடியிருப்புகளின் மின்சாரத்தை பராமரிக்கும் கோல்ட் ஸ்டார் என்ற நிறுவனத்தின் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் அனைவருக்கும் அதிர்ச்சி நிறைந்த கவலையை அளித்து வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications