Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் மனைவி கர்ப்பம்! ஆண் குழந்தை இல்லை என தெரிந்ததும்.. எய்ட்ஸ் ஊசி போட்ட கணவர்! அதிர்ந்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் விவாகரத்து பெற எல்லை மீறி, கணவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். மனைவிக்கு எச்ஐவி ஊசி போட்டுள்ளார் இந்த கொடூரன்.

சமீப காலங்களாகப் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த செய்திகளைப் படித்தால் நிச்சயம் அனைவரும் தலை சுற்றிவிடும். தலைநகர் டெல்லியில் ஷரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலனே கொன்று துண்டு துண்டாக வெட்டிப் போட்டார்.

இப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படித்தான் ஆந்திர மாநிலத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பது பற்றிக் கூட கவலைப்படாமல் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இளம் பெண்

இளம் பெண்

ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளியை சேர்ந்தவர் சரண் (40). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். பெற்றோருக்கு இவர்களின் காதல் குறித்துத் தெரிய வந்த போது, அவர்களும் காதலை எதிர்க்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். முதல் சில ஆண்டுகள் நன்றாகவே சென்று கொண்டிருந்துள்ளது. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படத் தொடங்கியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியையே அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார்.

எச்ஐவி பாதிப்பு

எச்ஐவி பாதிப்பு

இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகவே அந்தப் பெண் உடல் வலிமையிழந்து பலவீனமாக உணர தொடங்கியுள்ளார். எதாவது சின்ன மருத்து பாதிப்பாக இருக்கும் என நினைத்து அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பெண் வழக்கமான மருத்துவ சோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ் எனத் தெரிந்ததும் அதிர்ந்தே போய்விட்டார். தனக்கு எப்படி எய்ட்ஸ் பாதிப்பு வந்தது எனத் தெரியாமல் குழம்பிவிட்டார்.

புகார்

புகார்

இப்போது அவர் தனது கணவர் மீது அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதலே அந்த கணவர் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மிரட்டித் துன்புறுத்தியுள்ளார். சில ஆண்டுகளாகவே இந்தப் பிரச்சினை தொடர்ந்துள்ளது. மேலும், சரணுக்கு 21 வயதான இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே விட்டுச் செல்லும்படி மிரட்டி அடித்து வந்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

மேலும், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். அப்போதில் இருந்தே அந்த கணவர், "நமக்கு ஆண் குழந்தை வேண்டும்" என்று தொடர்ந்து சொல்லி வந்துள்ளார். இருப்பினும், அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பே, தனது மனைவியின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பதை அந்த நபர் எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இதனால் கடுப்பான அந்த நபர், தனது மனைவியை அப்பகுதியில் மருத்துவம் பார்க்கும் பாட்டி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அங்குத் தனது திட்டத்தின்படி எச்ஐவி ஊசியைப் போட்டுள்ளார். அந்தப் பெண் எதற்காக ஊசி போடுகிறார்கள் எனக் கேட்டதற்கு, உடலில் சத்திற்காகவே ஊசி போடுவதாகக் கூறி சமாளித்துள்ளார். மனைவிக்கு எச்ஐவி என்பதைக் கூறினால், எளிதாக விவகாரத்து கிடைத்துவிடும் என்று திட்டம் போட்டே அந்த கொடூரன் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், விவகாரத்துக் கோரி விண்ணப்பிக்கும் மனைவி தனக்கு எச்ஐவி இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்.

கைது

கைது

இது தொடர்பாகக் கணவரிடம் கேட்டபோது, கர்ப்பமாக இருந்த போது எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூலாக கூறியுள்ளார். இதைக் கேட்டதும் சந்தேகமடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சரணை கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மனைவிக்கே இந்த நபர் எச்ஐவி ஊசி போட்டது தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+