ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹேய்.. சந்திரபாபு நாயுடுவா இது?.. ஒருத்தரும் கிட்ட வரலயே.. கடகடனு பஸ்ஸின் டாப்பில் ஏறி நின்று.. வாவ்

சந்திரபாபு நாயுடு தனியார் பஸ் மீது ஏறிநின்று பேசும் வீடியோ ஷேர் ஆகிறது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சந்திரபாபு நாயுடுவின் வீடியோ ஒன்று இணையத்தில் 2 நாட்களாகவே பரவி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த அவரது தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஆந்திராவுக்கு மறுபடியும் 2024ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது... இதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில், தெலுங்கு தேசம், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

அந்தவகையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் குறைபாடுகளை ஒருவர்மீது ஒருவர் சுட்டிக்காட்டி, விமர்சனங்களை முன்வைத்து, பரபரப்பை கிளப்பி வருகின்றன.. எனவே, ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் கோரச் சம்பவம்.. 3 பெண்கள் பரிதாப பலி.. நடந்தது என்ன?சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் கோரச் சம்பவம்.. 3 பெண்கள் பரிதாப பலி.. நடந்தது என்ன?

 திடீர் தடை

திடீர் தடை

அந்தவகையில், தெலுங்கு தேச சட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும், தன்னுடைய தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்.. சமீபத்தில் இவரது குண்டூர் மற்றும் நெல்லூர் பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.. இது அந்தமாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதையடுத்து பொதுக்கூட்டங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி அரசு தடை விதித்திருக்கிறது.. இந்நிலையில், குப்பம் தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார் சந்திரபாபு நாயுடு..

மைக்

மைக்

இதற்காக 2 நாட்களுக்கு முன்பு, குப்பம் சென்ற சந்திரபாபு நாயுடுவை அங்கிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்வதற்காக புறப்பட்ட சந்திரபாபு நாயுடுவை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். குப்பம் தொகுதியில் வாகன அணிவகுப்பில் செல்வது, மைக் பிடித்து பேசுவது, பொதுக் கூட்டம் நடத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் எடுத்து சொன்னதால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது... முன்னதாக, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு, சந்திரபாபுநாயுடு செல்ல முற்பட்டபோது, போலீசார் அவரது காரை பறிமுதல் செய்தனர்..

 ஜெகன்மோகன்

ஜெகன்மோகன்

இதில் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.. பின்னர் அங்கு வந்த ஒரு தனியார் பஸ் மீது மீது ஏறி நின்று மக்களிடையே ஆவேசமாக பேசினார். "போலீசார் அடிமை போல் நடத்துகிறார்கள், ஆட்சி மாறி அதிகாரம் வந்ததும் போலீசாருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.. முதல்வர் ஜெகன்மோகன், கடந்த செவ்வாய்க்கிழமை ராஜமுந்திரியில் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினாரே? ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? ஜனநாயகத்தில் அராஜகத்திற்கு இடமில்லை என்பதை ஜெகன்மோகன் ரெட்டி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சீற்றத்துடன் பேசி எச்சரித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

 பஸ் டாப்

பஸ் டாப்

இந்நிலையில், அந்த தனியார் பஸ் மீது, சந்திரபாபு நாயுடு வேக வேகமாக ஏறும் வீடியோதான் இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.. அதுவரை போலீசாரை கண்டித்தும், தரையில் உட்கார்ந்தும் கோஷங்களை எழுப்பி கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு, திடீரென அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பஸ்ஸின் ஏணியைப்பிடித்து கடகடவென ஏறுகிறார்.. அப்போது அவரது தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.. யாருடைய உதவியையும் எதிர்பாராமல், அவராகவே படிக்கட்டில் ஏறி, பஸ்ஸின் டாப்பில் மீது ஏறி நின்று கொண்டு, ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்தார்.. இந்த வீடியோவைவையும், அவரது ஆவேச பேச்சையும், தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் இணையத்தில் விடாமல் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

English summary
chandrababu naidu perches on top of the Private bus and slams cm jagan mohan in kuppam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X