ஆந்திராவை மிரட்டும் ’மோந்தா’ புயல்.. 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'மோந்தா' புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையில் இருக்கும் எனவும் ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாட்களுக்கு ஆந்திராவில் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

மோந்தா புயல்

அதனை தொடர்ந்து நாளை தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த 'மோந்தா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

ஆனால் வங்கக்கடலில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என தெரிகிறது.

சென்னை நாளை ஆரஞ்சு அலர்ட்

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையில் இருக்கும் எனவும் ஆய்வு மையம் கணித்துள்ளது. மோந்தா புயல் ஆந்திரா நோக்கி பயணிப்பதால் சென்னைக்கு பாதிப்பு நீங்கியது. இந்த நிகழ்வால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்ற 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கன மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

cyclone-montha-schools-closed-in-several-andhra-districts-amid-heavy-rain-alert

ரெட் அலர்ட் எச்சரிக்கை

புயல் உருவாக உள்ளதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ஆந்திராவில் புயல் கரையைக் கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராணுவம் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது. ஆந்திரவில் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் பள்ளிகள் விடுமுறை

இதற்கிடையே புயல் கரையைக் கடப்பதால் ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதவாரி, அன்னமய்யா, கடப்பா, என்.டி.ஆர், படாலா, கிருஷ்ணா மற்றும் குண்டூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தீவிரத்தை பொறுத்து மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+