அனுராதா.. அணுஅணுவாய் "பிரிந்த உயிர்".. சிதைந்த உறுப்புகள்.. யாரந்த ஹவுஸ் ஓனர்? ஃப்ரிட்ஜை திறந்தால்?
ஹைதராபாத்: கொலை செய்துவிட்டு, இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது.. நேராக சடலத்தை கொண்டுவந்து ஃப்ரிட்ஜில்தான் வைத்துவிடுகிறார்கள் கொடூரர்கள்.. ஷ்ரத்தா கொலையை போலவே இப்போதும், ஒரு கொடுமை நம் நாட்டில் நடந்துள்ளது
தலைநகரில் நடந்த ஷ்ரத்தா கொலை விவகாரமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஷ்ரத்தாவின் காதலன் அப்தாப்.. லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தபோது, இருவருக்கும், தகராறு வெடித்துவிட்டது.. ஷ்ரத்தாவை அஃப்தாப் கொலை செய்துவிட்டார்.

அதிர்ந்த டெல்லி: ஷ்ரத்தா வாயையும் மூக்கையும், தலைகாணியை எடுத்து நீண்ட நேரம் அழுத்தியதில், ஷ்ரத்தா துடிதுடித்து இறந்தார்.. இதற்கு பிறகு, பீர் குடித்துக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும், ஜொமேட்டாவில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டும், நெட்ஃபிளிக்சில் சினிமா பார்த்துக்கொண்டும், நடுநடுவே ரெஸ்ட் எடுத்துக் கொண்டும், ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் துண்டு துண்டாக வெட்டி இருக்கிறார்..
35 துண்டுகளாக வெட்டி முடிக்க, 10 மணி நேரம் ஆகி இருக்கிறது.. ஒவ்வொரு உறுப்பையும் வெட்டியபிறகு, ரத்தக் கசிவு இல்லாமல், தண்ணீரில் நன்றாக அலசி இருக்கிறார்.. 32 துண்டுகளாக அறுக்க ரம்பம் ஒன்றை புதுசாக வாங்கியது முதல் உடலை வைக்க, ஃப்ரிட்ஜ் ஒன்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியதுவரை, அவர் சொன்ன வாக்குமூலம், மொத்த மக்களையும் அதிர வைத்தது.. இந்த வழக்கு இன்னமும் முடிவு பெறவில்லை.
குப்பை தொட்டியில் தலை: இதோ அதற்குள் ஹைதராபாத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கடந்த மே 24ம்தேதி அனுராதா என்ற பெண்ணை கொன்றுள்ளார்கள்.. அவரது தலை அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கிடந்திருக்கிறது..
முசி ஆற்றுக்கு பக்கத்திலுள்ள அப்சல் நகர் சமூகக் கூடத்தின் குறுக்கே உள்ள குப்பை தொட்டியில் ஒரு கருப்பு பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு, அனுராதாவின் தலை கிடந்துள்ளது.. துப்புரவு பணியாளர் ஒருவர், இந்த தலையை பார்த்து அலறியடித்து ஓடியுள்ளார். அதற்கு பிறகுதான் இந்த விஷயமே வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.
அனுராதா தலை: அனுராதாவுக்கு 55 வயதாகிறது.. இவர் சந்திர மோகன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.. ஹவுஸ் ஓனருக்கு 55 வயதாகிறது.. இவரது வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில், அனுராதா குடியிருந்து வந்துள்ளார்.. இவர்கள் இருவருக்குள்ளும் தகாத உறவு இருந்திருக்கிறது.. அனுராதா ஒரு கந்து வட்டிக்காரர்.. அதனால், சந்திரமோகன் அவரிடமிருந்து 2018 முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்..
இந்த கடனை திருப்பி செலுத்தாததால், அனுராதா பணத்தை கேட்டுள்ளார்.. நாளுக்கு நாள் அனுராதாவின் நச்சரிப்பு அதிகமாகவும், அவரை கொலை செய்ய திட்டம் பிளானை போட்டாராம் சந்திரமோகன்.
கத்திக்குத்து: இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி மறுபடியும் 2 பேருக்கும், கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போதுதான், ஆத்திரமடைந்த சந்திரமோகன், அனுராதாவை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.. இதற்கு பிறகு, சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.. பிறகுதான், அனுராதாவின் உடலை அப்புறப்படுத்த 2 கல் வெட்டு மிஷின்களை விலைக்கு வாங்கி வந்தாராம்..
அனுராதாவின் உடலை 6 துண்டுகளாக வெட்டியிருக்கிறார். அவைகளை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.. இதற்காக உடல் துண்டுகளை, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளார்.. பிணவாடை வராமல் இருப்பதற்காக, ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியிருக்கிறார். பிணத்தின் அழுகும் வாசனையை மறைக்க அவர், டெட்டால், வாசனை திரவியங்கள், ஊதுபத்தி குச்சிகள், கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறார்..
ஃப்ரிட்ஜ்ஜில் பிணம்: இதனிடையே, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, உயிரிழந்த அனுராதாவின் செல்போனில் இருந்து, மெசேஜ்களையும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.மே 15ம் தேதி, அனுராதாவின் தலையை, ஆட்டோவில் எடுத்து சென்று, குப்பைமேடு பகுதிக்கு வந்து வீசிச்சென்றுள்ளார்..
மற்ற உடல் உறுப்புகளை அப்புறப்படுத்துவதற்குள், சந்திரமோகன் கைது செய்யப்பட்டுவிட்டார்.. நடந்த சம்பவத்தையெல்லாம் வாக்குமூலமாகவும் போலீசில் சொல்லி உள்ளார்.. இப்போது அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் 201 (குற்றத்திற்கான சான்றுகள் காணாமல் போனது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..!!
முதலில் குப்பை மேட்டில் தலையை கண்டெடுத்ததுமே, அந்த சடலம் யாரென்று போலீசாருக்கு அடையாளம் தெரியவில்லை.. எந்த க்ளுவும் அதைப்பற்றி கிடைக்கவில்லை..
அதனால், குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிப்பதற்காகவே, மொத்தம் 8 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டார்களாம்.. இதைத்தவிர, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து, பலவழிகளில் குற்றவாளியின் தடயத்தை பெற முயன்றுள்ளனர்.. அப்போதுதான், 48 வயதான நபர், 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.. கள்ளக்காதலி என்ற உரிமையில், ஏகப்பட்ட பணத்தை வாங்கியிருக்கிறார் ஹவுஸ் ஓனர்.. ரூ.7 லட்சம் கடனாக தந்திருக்கிறார் அனுராதா.. இதில் கொஞ்ச பணத்தைகூட திருப்பி தரவில்லையாம் அந்த ஹவுஸ் ஓனர்.. !!












Click it and Unblock the Notifications