கணவரை காதலித்த பெண்.. ஆசை யாரை விட்டது.. எல்லைமீறிய சரிதாவின் கரிசனம்.. இப்படியொரு மனைவியா? சூப்பர்ல
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இது தொடர்பான வீடியோவையும் அதிகளவில் இணையவாசிகள் ஷேர் செய்தும், வாழ்த்து கூறியும் வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடபயலு அருகே உள்ள கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவரது மனைவி சாகேனி பர்வதம்மா..

திருமணங்கள்: கடந்த 2000ல் இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. இதனால், 2வது திருமணம் செய்ய முடிவு செய்த பாண்டண்ணா, இதுகுறித்து மனைவி பர்வதம்மாவிடம் சொல்லியிருக்கிறார்.. உடனே பர்வதம்மாளும், சாகேனி அப்பளம்மா என்ற பெண்ணை பார்த்து, கடந்த 2005-ல் தன்னுடைய கணவருக்கு, 2வது திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த பண்டண்ணா - சகேனி அப்பளம்மா தம்பதிக்கு இப்போது 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. பர்வதம்மா உட்பட அனைவருமே ஒன்றாக வசித்து வந்தனர்.
குழந்தைகள்: இந்நிலையில், பாண்டண்ணாவுக்கு இன்னொரு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால், 2 மனைவிகளாலும் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, 3வது திருமணம் செய்ய ஆசைப்பட்டார் பாண்டண்ணா.. இந்த விருப்பத்தை தன்னுடைய 2 மனைவிகளிடம் சொல்லவும், அவர்களும் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.
அதே ஊரில் வசிக்கும் இளம்பெண்ணை திருமணத்துக்கு பேசி முடித்தனர்.. ஊருக்கெல்லாம் பத்திரிகை தந்து அனைவரின் முன்பும் கணவருக்கு 3வது திருமணத்தை 2 மனைவிகளும் நடத்தி முடித்தனர். இது தொடர்பாக வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது..
மனைவி சரிதா: இந்நிலையில், தெலங்கானாவில் இதுபோலவே ஒரு திருமண வைபவம் நடந்துள்ளது.. மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாசரி சுரேஷ்.. இவரது மனைவி சரிதா.. சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.. இந்த தம்பதிக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அதே ஊரை சேர்ந்த தன்னுடைய மாமன் மகளான சந்தியாவை காதலிக்க ஆரம்பித்தார் சுரேஷ்..
மாற்றுதிறனாளியான சந்தியாவை பற்றி, தன்னுடைய மனைவி சரிதாவிடம் சொன்னார் சுரேஷ்.. சந்தியாவை திருமணம் செய்த கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதனையடுத்து கணவர் சுரேஷ்க்கும் - சந்தியாவுக்கும் கோயிலில் உறவினர்கள் முன்னிலையிலேயே திருமணம் செய்து வைத்தார் சரிதா.
மணமக்கள்: இதுகுறித்து மனைவி சரிதா சொல்லும்போது, மாற்று திறனாளியான சந்தியா என்னுடைய கணவர் மீது ஆசைப்படுகிறார்.. அதனால் மனிதாபிமானத்துடன், இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்தேன். முக்கியமாக, மாற்றுதிறனாளியான சந்தியாவை நல்லப்படியாக பார்த்து கொள்ளவே, என்னுடைய கணவருக்கு திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறேன்" என்று பூரித்து சொல்கிறார் சரிதா. இந்த திருமண வைபவமும் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications