ரூ 59க்கு ரீசார்ஜ் செய்யுங்க.. மெட்ரோ ரயிலில் இஷ்டத்துக்கு எத்தனை முறை வேணாலும் போங்க!
ஹைதராபாத்: வெறும் 59 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு மெட்ரோ ரயிலில் அன்லிமிடெட் பயணம் செய்யலாம். இந்த ஆஃபர் சுதந்திர தினம் வரை மட்டும்தானாம்.
இந்தியா 77 ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல நிறுவனங்கள் ஆஃபர்களை வழங்கி வருகிறது. துணிக்கடை, பாத்திரக்கடை, செல்போன், லேப்டாப் கடைகளிலும் இந்த ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கிறது.

அது போல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ காமர்ஸ் நிறுவனங்களுக்கு தங்கள் பங்கிற்கு பல ஆஃபர்களை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மெட்ரோ ரயில் டிக்கெட்டிலும் ஆபர்கள் வழங்கப்படுகிறது.
அதாவது ரூ 59 க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் அன்லிமிடெட்டாக பயணம் செய்யலாம். அப்படி ஒரு சலுகையை கொடுத்துள்ளது ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம். இதில் பயணிகள் தங்களது சூப்பர் சேவர் மெட்ரோ ஹாலிடே கார்டை ரூ 59 க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகையை ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் (Hyderabad Metro Rail Limited)வழங்கப்படுகிறது.
இந்த சலுகையின் கீழ் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மெட்ரோவில் 59 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிடெட்டாக பயணம் செய்யலாம். இந்த சலுகைகள் மூலம் சுதந்திர தினத்தின் போது நிறைய பயணிகள் மெட்ரோவை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதைத் தாண்டி போக்குவரத்து நெரிசலை இந்த மெட்ரோ ரயில்கள் குறைத்து வருகின்றன.
குறைந்த காசில் சொகுசான பயணங்களை கொடுக்கிறது. புல்லட் ரயில் போல் சற்று கூடுதல் வேகத்தில் செல்கிறது. இதனால் நேரமும் மிச்சமாகிறது. இந்த மெட்ரோவை பலர் பயன்படுத்தி வருகிறார். இது முக்கிய நகரங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அத்துடன் வீட்டுக்கு 4 கார் இருந்து வரும் நிலையில் இந்த மெட்ரோ வந்ததும் பலர் தங்கள் வாகனங்களை எடுப்பதை மறந்துவிட்டனர்.
இதனால் கார்களின் புகைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இந்த மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.












Click it and Unblock the Notifications