ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் பாஸ்கர ராவ் காலமானார்.. ராமராவ் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியில் இருந்தவர்!
ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் பாஸ்கர் ராவ் உடல்நலக்குறைவு காரணமாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் காலமானார். என்.டி.ராமாராவ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது ஆட்சியைக் கைப்பற்றி 31 நாட்கள் முதல்வராக இருந்தவர் பாஸ்கர ராவ்.
கடந்த 1978ல் காங்கிரஸ் சார்பில் முதன்முறையாக விஜயவாடா எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்கர் ராவ், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சென்னா ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். அதன்பின், என்.டி.ராமா ராவ் துவங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இந்த கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அவர், 1983ல், குண்டூர் மாவட்டத்தின் வேமூரு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனார்.

என்.டி.ராமா ராவ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது, அவருக்கு எதிராக புரட்சி செய்து, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு பிரிவினர் ஆதரவுடன் பாஸ்கர் ராவ் ஆட்சியை கைப்பற்றினார். 1984 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை என வெறும் 31 நாட்கள் மட்டுமே அவர் முதல்வராக பதவி வகித்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திர வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்த முதல்வர் பாஸ்கர ராவ் தான். பாஸ்கர ராவ் ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக மாநிலம் முழுதும் என்.டி.ராமா ராவ் போராட்டம் நடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு பின், முதலமைச்சர் பதவியை பாஸ்கர் ராவ் ராஜினாமா செய்தார். பின்னர் பாஸ்கர ராவ் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் ராவ், நேற்று உயிரிழந்தார். பாஸ்கர ராவின் மகன் நாதென்ட்லா மனோகர், தற்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கிறார். பாஸ்கர் ராவ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications