ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க பொண்ணு ஓடி போயிருப்பா.. போய் தேடுங்க.. புகார் தந்த ஹைதராபாத் பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போலீஸ்

ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் வழக்கு பதியாமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் ஒரே குரல் #JusticeForPriyankaReddy

    ஹைதராபாத்: ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் வழக்கு பதியாமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. புகார் கொடுக்க வந்த பெண்ணின் பெற்றோரை போலீசார் அவமானப்படுத்தி உள்ளனர்.

    ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

    அந்த இடத்திலேயே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்து உள்ளனர். அதோடு பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.

    பிரியங்கா 100-க்கு போன் செய்திருக்கணும்.. சிஸ்டரை எதுக்கு கூப்பிடணும்.. தெலுங்கானா அமைச்சர் சர்ச்சைபிரியங்கா 100-க்கு போன் செய்திருக்கணும்.. சிஸ்டரை எதுக்கு கூப்பிடணும்.. தெலுங்கானா அமைச்சர் சர்ச்சை

    என்ன போலீஸ்

    என்ன போலீஸ்

    இந்த நிலையில், இந்த வழக்கில் சத்தனபள்ளி டோல் கேட் போலீசாரின் செயல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்நாள் இரவு பெண் வரவில்லை என்றதும் மறுநாள் காலை போலீசாரிடம் அவரின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். வியாழக்கிழமை காலை புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களின் புகாரை ஏற்கவில்லை.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    அந்த பெண்ணின் பெற்றோர் எவ்வளவு முயன்றும் கூட போலீசார் அவர்களின் புகாரை ஏற்கவில்லை. உங்க பெண் ஓடி போய் இருப்பார். அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்து இருக்கிறார். கண்டிப்பாக ஓடி போய் இருப்பார். அதனால் வழக்கு பதிய முடியாது.

    வழக்கு

    வழக்கு

    இது மிஸ்ஸிங் கேஸ் கிடையாது. அவரின் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள் என்று போலீசார் அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறி உள்ளனர். அதேபோல் அந்த காணாமல் போன சம்பவம் நடந்தது சத்தனபள்ளி டோல் கேட் எல்லையில், அதனால் வழக்கு எந்த போலீஸ் ஸ்டேஷன் வரையறைக்கு உட்பட்டது என்றும் ஆராய்ந்து காலம் தாழ்த்தி உள்ளனர். இதற்கு மத்தியில்தான் அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    உடல் கிடைத்தது

    உடல் கிடைத்தது

    பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, கருகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் வெளியான பின்தான் இதன் கொடூரத்தை போலீசார் புரிந்து கொண்டனர். அதன்பின் மேலதிகாரிகள் அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை விசாரித்து, வேகமாக முடித்துள்ளனர். இதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டு தெடுத்த வேட்டை நடந்தது.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    Hyderabad Veterinary Doctor Murder: Police asked parents if the daughter has eloped with someone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X