Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛தனி மெஜாரிட்டி’ தெலங்கானாவை கைப்பற்றும் காங்கிரஸ்! கேசிஆர், ஓவைசி, பாஜகவுக்கு ஷாக் -கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும், சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ் - முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது முதல் இவரது ஆட்சி நடந்து வருகிறது. தற்போது 2வது முறையாக அவர் முதல்வராக இருக்கிறார்.

KCR may lost power and Congress will win Telangana Assembly Election 2023, says Lok Poll opinion Poll

இந்நிலையில் தான் வரும் டிசம்பர் மாதம் தெலங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராகும் முனைப்பில் சந்திரசேகர ராவ் உள்ளார். இதற்காக அவர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க முயன்று வருகிறது.

மேலும் பாஜக மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் களப்பணியை தொடங்கி உள்ளன. தெலங்கானாவை பொறுத்தமட்டில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் லோக்போல் (Lok poll) சார்பில் தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. மாறாக தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த லோக் போல் கருத்து கணிப்பு என்பது ஆகஸ்ட் 10ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மொத்தம் 60 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி 41 சதவீதம் முதல் 44 சதவீத ஓட்டுக்கள் பெற்று 61 முதல் 67 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆட்சியமைக்க 60 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி அதனைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெறலாம் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாறாக முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியானது 39 சதவீதம் முதல் 42 சதவீத ஓட்டுகள் பெற்று 45 முதல் 51 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிஆர்எஸ் கட்சியானது தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழக்க வாய்ப்புள்ளதாக லோக்போல் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் முதல் முதலாக தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவை தவிர்த்து இன்னொரு கட்சியை சேர்ந்தவர் முதல்வராக பொறுப்பேற்பார்.

இதுதவிர அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியானது 3 முதல் 4 சதவீத ஓட்டுக்கள் பெற்று 6 முதல் 8 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 10 முதல் 12 சதவீத ஓட்டுகளை அறுவடை செய்தாலும் கூட 2 முதல் 3 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றவர்கள் ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என லோக்போல் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+