அதிர்ச்சி.. காளி காலடியில் கிடந்த "மனித தலை".. அலறி ஓடிய மக்கள்.. மாயமான உடம்பு.. உலுக்கும் சம்பவம்
தெலுங்கானாவில் காளி கோயில் வாசலில் மனித தலை இருந்துள்ளது
ஹைதராபாத்: காளி சிலையின் காலடியில் ஒரு மனித தலை உருண்டு கிடந்த விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இங்கு சாலையோரம் இந்த காளி கோயில் அமைந்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, மனித தலையை பார்த்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் தேவரகொண்டா போலீசுக்கு தகவல் தெரிந்து அவர்கள் விரைந்து வந்தனர்.

யார் தலை
இது தொடர்பாக டிஎஸ்பி ஆனந்த் ரெட்டி சொல்லும்போது, "யார் என்று தெரியவில்லை.. தலை மட்டும் உள்ளது.. மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. அந்த நபருக்கு 30 வயது இருக்கலாம்.. காளி கோயில் காலடியில் மனித தலை வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.. இந்த நபரை இங்கு வைத்துதான் கொன்றார்களா? அல்லது வேறு எங்காவது கொன்றுவிட்டு தலையை மட்டும் கொண்டு வந்து காளியின் காலடியில் வீசிவிட்டு போனார்களா தெரியவில்லை.

8 தனிப்படைகள்
ஆனால், தலை இந்த சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றே சந்தேகம் அதிகமாக உள்ளது.. இவர் யார் என்ற விசாரணையும் நடத்தி வருகிறோம்.. இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, ஆய்வு செய்து வருகிறோம்.. இதற்கு உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.. அதையும் தேடி வருகிறோம்.. இப்போதைக்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, குற்றவாளிகளை பிடிக்கவும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.

திடீர் திருப்பம்
காளி சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட தலை சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. போலீசாரும் அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.. இந்நிலையில் திடீர் திருப்பமாக ஒரு முக்கிய தகவல் போலீசுக்கு கிடைத்துள்ளது.. கொலை செய்யப்பட்ட நபர் குறித்து ஒருவர் போலீசுக்கு போன் செய்துள்ளார்..

நரபலியா?
படுகொலை செய்யப்பட்டவர் தன்னுடைய உறவினர் என்றும், அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ள நிலையில், 2 வருடங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.. இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. தெலுங்கானாவில் சமீப காலமாக நரபலி கொடுப்பது அதிகரித்து வரும் நிலையில், அந்த கோணத்திலும் இந்த கொலை சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. எதுவானாலும் 2, 3 நாட்களில் உண்மைத்தன்மையை போலீசார் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications