திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுகவின் அப்பட்டமான அரசியல் மிரட்டல் இது! பாய்ந்து வந்த பவன் கல்யாண்!
ஹைதராபாத்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்பிக்கள், பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவர மனு கொடுத்திருக்கின்றனர். இதற்கு ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். திமுக மற்றும் இந்தியா கூட்டணியின் இந்நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதியையோ, சமீபத்தில் விஷ்ணு குறித்து இழிவான கருத்தை பேசிய முன்னாள் தலைமை நீதிபதியையோ பதவி நீக்கம் செய்ய குரல் எழவில்லை. ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி குறிவைக்கப்படுகிறார். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அரசியலமைப்பை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இது அப்பட்டமான அரசியல் மிரட்டல்" என்று பவன் கல்யாண் விமர்சித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றி வரும், உச்சிப் பிள்ளையார் தீப மண்டபத்தில் இந்த ஆண்டு கார்த்திகை தீப நாளன்று தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடின. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், டிச.1ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில், டிச.3ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில் மனு தாரர் கேட்ட தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
பிரச்சனையே அங்குதான் வெடித்தது. தர்காவை மலை மீது இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், தர்கா பக்கத்தில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற கோருவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என ஜனநாயக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இப்படி இருக்கையில் டிச.3ம் தேதி வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் தீப தூணில், தீபம் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் நாங்கள் கேட்ட தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி மனு தாரர் மீண்டும் டிச.3ம் தேதி நீதிமன்றத்தை நாட, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்ற வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டார். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே கலவரம் வெடித்தது.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மதச்சார்பற்ற நடைமுறையை பின்பற்றவில்லை என்று கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவர, நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் பவன் கல்யாண் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications