பெண்களை தேடி தேடி கொன்ற சீரியல் கில்லர்.. கிணற்றில் கிடந்த இளம் பெண்களின் உடல்..ஹைதராபாத்தில் பகீர்

ஹைதராபாத்தில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் தேடி தேடி கொலை செய்த சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் தேடி தேடி கொலை செய்த சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவரை குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பொம்மலாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் காணாமல் போனார். இதையடுத்து இவரின் பெற்றோர் பொம்மலாபுரம் போலீசிடம் புகார் அளித்தனர்.

பொம்மலாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி படித்த பள்ளியின் சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்தனர்.

எப்படி மாட்டினான்

எப்படி மாட்டினான்

அதில் அந்த சிறுமிக்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பள்ளிக்கு வெளியே லிப்ட் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து விசாரணை நடத்திய போலீஸ் மாரி ஸ்ரீனிவாச ரெட்டி என்ற இளைஞரை சிசிடிவி ஆதாரங்கள் மூலம் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலை

கொலை

அதன்படி அந்த சிறுமியை தான் கடத்தி, வன்புணர்வு செய்து, கொலை செய்து கிணறு ஒன்றில் எரித்து கொன்றதாக மாரி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஹாஜிபூர் என்ற கிராமத்தில் உள்ள அந்த கிணற்றில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அங்கு அந்த சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இரண்டு

மேலும் இரண்டு

ஆனால் போலீசாருக்கு அங்குதான் பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த கிணற்றில் வரிசையாக, இன்னும் இரண்டு பேரின் உடல் கிடைத்து இருக்கிறது. 19 வயது பெண் ஒருவரின் உடலும், 17 வயது சிறுமி ஒருவரின் உடலும் அதில் கிடைத்துள்ளது. பின் பிரேத பரிசோதனை மூலம் இவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல்

அதேபோல்

இவர்களும் கடந்த சில வாரங்களுக்கு முன் காணாமல் போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மூன்று பேரும் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராட்சசன் படத்தில் வருவது போலவே இந்த கொலை நடந்துள்ளது.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

இந்த மூன்று கொலையையும் தான்தான் செய்தது என்று அந்த சீரியல் கில்லர் மாரி ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த கொலை குறித்து அந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாரியிடம் தீவிரமாக தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+