'மெல்ல விடை கொடு விடை கொடு மனமே'.. அரசு பள்ளி ஆசிரியரை போக விடாமல் காலை பிடித்து அழுத மாணவிகள்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதை கேட்டு கலங்கிப்போன அரசு பள்ளி மாணவிகள்,. அவரது காலை பிடித்து கதறி அழுது போக வேண்டாம் என்று கூறியது காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பாசம் என்பது, தாய், தந்தைக்கு அடுத்தபடியானது. அவர்களால் தான் மாணவருக்கு நல்ல கல்வி கற்றுத்தருகிறார்கள். அதேபோல் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறார்கள். வாழ்க்கையில் எப்படி இருந்தால் ஜெயிக்கலாம்.

எப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுற்றியுள்ள சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் ஆசிரியர்களே கற்றுதருகிறார்கள். ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். அவர்கள் கற்றுத்தரும் கல்வி அவ்வளவு சக்தி வாய்ந்தது.
மாணவர்களை பொறுத்தவரை ஆசிரியர்களை உணர்வு பூர்வமாக தங்களின் குருவாக தங்களுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை அணுகுவார்கள். திடீரென வேறு இடத்திற்கு இடம் மாறுதல் சென்று போய்விட்டால், அவர்களால் அதை ஏற்க முடியாது. ஆசிரியர்கள் இடம் மாறி செல்லும் போது, அவர்களை போகவிடாமல் மாணவ மாணவிகள் தடுப்பார்கள். தங்களுக்கு பிடித்த ஆசிரியர் என்றால், அவரை போகவிடாமல் தடுத்து கண்ணீர்விட்டு அழுகவும் செய்வார்கள். தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் மேலச்செருவு மண்டலம் ஹேம்லதாண்டா கிராமத்தில் ஷேக் மஸ்தான் என்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருகக்கு புரமோசனுடன் கூடிய பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விடைபெற்று சென்ற ஆசிரியரின் காலை பிடித்து கதறி அழுது, போக வேண்டாம் என்று கூறினார்கள்.
தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தலைமை ஆசிரியர் இடமாறி செல்வதை அறிந்து மாணவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். சூர்யாபேட்டை ஹேம்லதாண்டா கிராமத்தில் ஷேக் மஸ்தான் என்பவர் ஒன்பது ஆண்டுகளாக ஹிந்தி கற்பித்தபடி, கிராமத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது ஆசிரியர் பணியில் மிகுந்த ஈடுபாடு காட்டியுள்ளார். ஷேக் மஸ்தான் பள்ளியை பெரிய அளவில் தரம் உயர்த்தியதுடன், மாவட்ட அளவில் அதிக மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளியாக மாற்றினார். இன்றும் போட்டி போட்ட பல பெற்றோர் சேர்க்கும் அரசு பள்ளியாக சூர்யபேட்டை மாவட்டத்தில் விளங்குகிறது. இவரை அந்த மாவட்டத்தில் பலரும் பாராட்டி வந்தார்கள்.
மிகவும் சாதாரணமாக இருந்த அந்த அரசு பள்ளியை நன்கொடையாளர்கள் உதவியுடன் பல வசதிகள் செய்து தர முயற்சிகள் மேற்கொண்டார். பள்ளியும் வேறலெவலில் மாறியது. அதுமட்டுமின்றி பள்ளியில் மாணவர்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே தீர்த்து வைத்துள்ளார்.
மாணவர்களை இந்தியாவின் தலைச்சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பணியை சிறப்பாகச் செய்த தலைமை ஆசிரியர் மஸ்தான், சமூக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்று, தோகரை என்ற ஊருக்கு செல்கிறார். மெல்ல விடை கொடு , விடை கொடு மனமே என்ற மனநிலையுடன் ஆசிரியர்கள் மாணவர்களிடம் விடைபெற்றார் தலைமை ஆசிரியர் மஸ்தான். மாணவர்கள் உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுதனர். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களை ஆறுதல்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் அழுது கொண்டே இருந்தனர். இந்த வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications