Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன் திருமணம்.. மனைவியின் அசிங்கமான காரியம்.. தெலங்கானாவில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, 40 வயது ஆண் ஒருவர் குழந்தை திருமணம் செய்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த சம்பவத்துக்கு சிறுமியின் அம்மா, 40 வயது நபரின் மனைவி துணையாக இருந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இதற்காக போக்சோ பிரிவில் அதிகளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மறுபக்கம் குழந்தை திருமணமும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

Child Marraige Telangana

13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன்

தெலங்கானா மாநிலம், நந்திகமா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் காவல்துறைக்கு ஒரு தகவல் கொடுத்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு, அவரின் குடும்பத்தினரே 40 வயது ஆணுடன் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்க தொடங்கினார்கள்.

அந்த சிறுமி தன் தாய் மற்றும் சகோதரருடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளரிடம் சிறுமியின் அம்மா, தன் மகளுக்கு ஒரு மணமகன் வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது ரங்கா ரெட்டி மாவட்டம் செவ்வெல்லா பகுதியைச் சேர்ந்த ஶ்ரீனிவாஸ் (வயது 40) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் யார் எல்லாம் உடந்தை

இதையடுத்து கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூரில் உள்ள கோயிலில் வைத்து சிறுமியை ஶ்ரீனிவாஸ் திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் சிறுமி மிகவும் வேதனையடைந்துள்ளார். இதை யாரிடம் சொல்வது என்று அறியாமல் அவர் தவித்த நிலையில், அவரின் நடவடிக்கையை பார்த்து ஆசிரியர் பேசியுள்ளார். அப்போதுதான் சிறுமி இந்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

காவல்துறை சிறுமியிடம் விசாரித்த போது, அவர் அனைத்து தகவல்களையும் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ஶ்ரீனிவாஸின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் அம்மா, ஶ்ரீனிவாஸ், அவரின் மனைவி, வீட்டு உரிமையாளர், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி உள்ளிட்ட 5 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைநகர் அருகிலேயே

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து சுமார் 55 கி.மீ தொலைவிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+