தெலுங்கானா தேர்தல்.. 2-வது கட்ட வேட்பாளர் 'லிஸ்ட்' வெளியிட்ட காங்.. அசாருதினுக்கும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக ஏற்கனவே 55 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் 2-ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அசாருதினுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியினை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தான் முதல்வராக உள்ளார்.

Telangana polls Congress release 2nd list of 45 candidates for election Azharuddin from jubliee hills

குறிப்பாக தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே கேசிஆர் தான் ஆட்சியில் இருக்கிறார். கடந்த 2018இல் அங்கு நடந்த தேர்தலில் கேசிஆர் கட்சி மொத்தமுள்ள 119 இடங்களில் 88ஐ அப்படியே கைப்பற்றியது. அந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியால் வெறும் 19 இடங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும், இப்போது அங்குள்ள கேசிஆர் அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலைப் பயன்படுத்தி அங்கே ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி அங்கு நேரடியாக மெகா பேரணியிலும் கலந்து கொண்டார். மேலும், கேசிஆர் கட்சியில் இருந்தும் பல டாப் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் இந்தாண்டு இறுதியில் நடக்கும் தெலுங்கானா தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் 115 வேட்பாளர்களை ஏற்கனவே ஆளும் பிஆர்எஸ் கட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து அண்மையில் 55 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது. இதில், மூன்று சிட்டிங் எம்.பிக்களான ரேவந்த் ரெட்டி, வெங்கட் ரெட்டி, உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் ஐந்து பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக காங்கிரஸ் கட்சி 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதேபோல் அசாருதினுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதேபோல் முன்னாள் லோக்சபாக எம்பி மது குட் யாக்சிக்கு லால் பகதூர் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+