300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : சமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி 300க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் போட்டோக்களையோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் போட்டோக்களையோ பதிவிடுதை வைத்து, குறிவைத்து நட்பு பாராட்டி பெண்களை வீழ்த்தி இருக்கிறார் இந்த இளைஞர். பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர் பிரசன்னகுமார் (28). இன்ஜினியரிங் படித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே கைவிட்டிருக்கிறார். பின்னர் வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

சீரழித்தவன்

சீரழித்தவன்


கடந்த மாதம் 29ம்தேதி திருட்டு வழக்கில் பிரசன்னகுமாரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரனையில் சிறிய திருட்டுகளை மேற்கொள்ளும் குற்றவாளி மட்டுமல்ல, பல பெண்களை சீரழித்தவன் என்பது தெரியவந்தது.

காதல் வார்த்தை

காதல் வார்த்தை

இதுகுறித்து ஆந்திர போலீசார் கூறும் போது , பிரசன்னகுமார் என்ற ராஜரெட்டி பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் இளம்பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி பழகி இருக்கிறார். பின்னர் காதல் வார்த்தைகளை நயமாக பேசி தனது வலையில வீழ்த்தியுள்ளார்

மிரட்டி உள்ளார்

மிரட்டி உள்ளார்

நன்றாக பழக்கம் ஏற்பட்டபிறகு அந்த பெண்களிடம் நிர்வாண, அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும்படி பிரசன்னகுமார் கேட்பாராம். அவனது காதல் வலையில் வீழ்ந்த பெண்களும், காதலன்தானே எனநினைத்து தங்களது நிர்வாண படங்களை அனுப்பி இருக்கிறார்கள்
இதையடுத்து பிரசன்னகுமார் இளம்பெண்கள் அனுப்பிய நிர்வாண படங்கள், வீடியோக்களை அவர்களிடமே காண்பித்து நகை, பணம் பறித்து இருக்கிறார். அவ்வாறு தரவில்லை என்றால் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியும் பறித்து இருக்கிறார்.

பாலியல் கொடுமை

பாலியல் கொடுமை

இதனால் பயந்து போன பெண்கள் அவன் கேட்கும் நகை, பணத்தை கொடுத்திருக்கிறார்கள். பல பெண்களை பிரசன்னகுமார் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பாலியல் கொடுமையாக செய்து வந்திருக்கிறார்.

செல்போன் பறிமுதல்

செல்போன் பறிமுதல்

கடப்பா, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட பல நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், பிரசன்னகுமாரின் காதல் வலையில் சிக்கி சீரழிந்துள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிரசன்னகுமாரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரே அதிர்ச்சி அடையும் வகையில் ஏராளமான இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிர்வாண படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+