Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க வந்தேறியா? ஒன்று திரண்ட 10,000 குக்கி பெண்கள்! அமித்ஷா பேச்சுக்கு எதிராக மணிப்பூரில் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் வன்முறைக்கு மியான்மரிலிருந்து வந்தேறிய குக்கி சமூக மக்களே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த 10,000 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்கள் தொடர்ந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய அமித்ஷா, "மியான்மர் நாட்டிலிருந்த ஊடுறுவிய குக்கி சமூக மக்கள்தான் இந்த வன்முறைக்கு காரணம்" என்று விமர்சித்திருந்தார்.

10,000 Kuki community women protest in Manipur against Amit Shahs speech

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிசோ தேசிய முன்னணியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பியான வன்லால்வேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "நாங்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு குடியேறவில்லை. சுதந்திரத்திற்கு முன்னரே நூற்றாண்டு காலமாக மிசோரமில் வசித்து வருகிறோம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவர் பேசியபோது இவரது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று குக்கி-ஜோ சமூகங்களை சேர்ந்த சுமார் 10,000 பெண்கள் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக கண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இந்த போராட்டம் நடந்திருக்கிறது. தனது தவறை அமித்ஷா திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர் பேசி கருத்துக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் பெண்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல இந்த கருத்துக்கு அமித்ஷா பெரும் விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளனர். போராட்டத்தில் உரையாற்றிய பெண்கள் நாங்கள் சட்டவிரோத ஊடுறுவல்காரர்கள் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

தற்போது மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு பாஜகவின் தேர்தல் வாக்குறுதிதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள மெய்டெய் மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, மெய்டெய் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மெய்டெய் மக்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.

இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 4ம் தேதி பேரணி நடத்தினர். அதுபோல மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்தினர். இது இரண்டும் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+