சைக்கிள் விவகாரம்: போலீஸ் கான்ஸ்டபிளால் தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுமி பலி
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிளால் தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் யாஸ்மீன் கான்(11). அவர் பக்கத்து வீட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் பிரகாஷ் ஜாரோலியா வசித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மதியம் யாஸ்மீன் பிரகாஷின் வீட்டுக்கு சென்று அவரின் சைக்கிளை எடுத்து ஓட்டியுள்ளார்.
யாஸ்மீன் தன்னிடம் கேட்காமல் தனது சைக்கிளை எடுத்து ஓட்டியதை பார்த்த பிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் சிறுமியை அடித்துள்ளார். அதன் பிறகு தனது வீட்டில் இருந்து உடல் முழுவதும் தீ எரிய வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார் யாஸ்மீன். பிரகாஷ் தான் யாஸ்மீன் மீது தீ வைத்ததாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.
இது குறித்து யாஸ்மீனின் தாய் ரிஹானா கூறுகையில்,
சம்பவம் நடந்தபோது நான் வீட்டில் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பிரகாஷ் அவரின் சைக்கிளை என் மகள் அனுமதியின்று எடுத்து ஓட்டியதால் அவரை அடித்துள்ளார். மேலும் எங்கள் வீட்டுக்குள் வைத்து எங்கள் மகள் மீது அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் என்று அக்கம்பக்கத்தினர் என்னிடம் தெரிவித்தனர். அவரை தண்டிக்க வேண்டும் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications