Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே பள்ளியில் 120 இரட்டையர்கள்.. ஓர் அதிசய பள்ளி..! குழம்பி தவிக்கும் ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

ஜலந்தர்: ஒரு குடும்பத்தில் இரட்டை குழந்தைகள் ஒரு ஜோடி இருந்தாலே அடையாளம் காணமுடியாமல் தவிக்கும் நிலை உள்ளபோது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதாக ஒரு அதிசயமான செய்தி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ளது போலீஸ் டிஏவி பப்ளிக் ஸ்கூல் இந்தியா முழுக்க உள்ள மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்திருக்கிறது. இந்தப் பள்ளியைச் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் 'இரட்டையர்கள் பள்ளி' என்று அன்பாக அழைக்கின்றனர். அதற்கு என்ன காரணம்? இந்தப் பள்ளியில் ஒன்று அல்ல இரண்டு அல்ல; கிட்டத்தட்ட 60 இரட்டைக் குழந்தைகள் இந்த ஒரே பள்ளியில் படிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகள் முன்னதாக இந்த எண்ணிக்கை 47 ஆக இருந்தது. இப்போது அது அப்படியே வளர்ந்துள்ளது.

punjab twins

இந்தப் பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ், “எங்களிடம் 60 இரட்டையர்கள் உள்ளனர். அப்படி என்றால் மொத்தம் 120 இரட்டையர் மாணவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களை எங்கள் பள்ளியிலேயே கொண்டுவந்து சேருங்கள் என்று கோரிக்கையைக் கூட நாங்கள் வைத்தது இல்லை. இவ்வளவு இரட்டையர்கள் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள் என்பது எங்களுக்கே ஒரு ஆச்சரியமான தகவல்தான்” என்கிறார்

தொடர்ந்து பேசிய அவர், “ஊடகத்தினர் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பும் போது ஏதேனும் பள்ளிக்கட்டணத்தில் இரட்டையர்களுக்குச் சலுகை கொடுக்கிறீர்களா? அதனால்தான் இவ்வளவு குழந்தைகள் வந்து படிக்கிறார்களா? என்கின்றனர். அப்படி ஒரு சலுகையும் நாங்கள் அளிப்பதில்லை. அனைவருக்கும் பொதுவான கட்டணம் என்னவோ அதையே வசூல் செய்கிறோம்” என்று சிரித்தபடி சொல்கிறார்.

இதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை சில்கி கவுர், “எங்களிடம் படிக்கும் பல இரட்டையர்கள் வீட்டில் ஒரு பிள்ளைக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பைப் பெற்றோர் தருவதாகப் புகார் அளிப்பார்கள்” என்கிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் சில இரட்டையர்கள் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். வேறு சிலர் வேறு வேறு வகுப்புகளில் தனித்தனியே படிக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடையாளம் காண்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஒரே உருவத் தோற்றத்தில் உள்ள அவர்களில் யார் தவறு செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பதாகவும் சொல்கின்றனர். இதே போல் மாணவர்கள் தரப்பிலும் சில குழப்பங்கள் ஏற்படுவதாக அந்தத் தரப்பு சொல்கிறது. ஒருவர் கேட்ட கேள்வியை மீண்டும் அவரது சகோதரி கேட்கும்போது ஆசிரியர்கள், 'முன்பே இதைத்தானே கேட்டாய்?’ என்பார்கள். நான் மீண்டும் விளக்கம் தர வேண்டி இருக்கும்’ என்கிறார் ஒரு மாணவி.

இந்தப் பள்ளியில் பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? ஒவ்வொரு முறையும் அடையாளம் தெரியாமல் பெயர்களை மாற்றி மாற்றி ஆசிரியர்கள் அழைக்கிறார்கள். விளக்கம் அளிப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்கிறார்கள் பல மாணவர்கள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஒரு சிறப்புத் திட்டத்தை இந்தப் பள்ளி அமல்படுத்தி இருக்கிறது. அது பற்றிப் பேசிய முதல்வர் ரஷ்மி விஜ், “நாங்கள் பெரும்பாலான இரட்டையர்களை ஒரே வகுப்பறையில் படிக்க அனுமதிப்பது இல்லை. தனித் தனிப் பிரிவில் போட்டுவிடுவோம். அதனால் ஓரளவு குழப்பத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது.

இதே மாதிரியான குழப்பங்கள் வீட்டிலும் பெற்றோருக்கும் ஏற்படுகின்றன. பல நேரங்களில் யாருக்கு உணவு கொடுத்தோம்? யாருக்குக் கொடுக்கவில்லை என்பதைக் கூடப் பெற்றோர்கள் அடையாளம் புரியாமல் குழம்பிப் போவதாகச் சிலர் பிள்ளைகள் விளையாட்டாகச் சொல்கிறார்கள். இதைப் பற்றி விரிவாக பிபிசி மற்றும் ஏ.என்.ஐ. உட்பட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனால் இந்தப் பள்ளி இந்திய அளவில், மிகப் பிரபலமாக இருந்து வருகிறது.

டர்பன் தலையுடன் பஞ்சாபி இரட்டையர் மாணவர்களில் ஒருவர், “எங்கள் உருவ ஒற்றுமையால் ஆதார் அட்டையில் என் சகோதரரின் படத்திற்குப் பதிலாக எனது புகைப்படம் இடம்பிடித்துவிட்டது. அதை அதிகாரிகளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை” என்று நகைச்சுவையாகச் சொல்கிறார். இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சினைகளைக் கடந்து இரட்டையர்கள் என்றாலே பலருக்கும் வியப்பு இருக்கவே செய்கிறது. அதில் ஒரே பள்ளியில் 60 இரட்டையர்கள் இருக்கிறார்கள் என்றால் சும்மாவா? ஒரு உலக சாதனைகளில் ஏன் இந்தப் பள்ளி இடம்பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+