கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து.. 3 தமிழர்கள் உட்பட 14 பேர் பலி! இரவு நேரத்தில் கோரச் சம்பவம்!
கொல்கத்தா: கொல்கத்தா ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுவின் குழந்தைகள், மாமனார் என 3 பேர் பலியாகி உள்ளனர்.
கொல்கத்தாவின் ஃபால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க, பலர் ஜன்னல் வழியாக குதித்து உள்ளனர்.

இந்த தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுவின் 2 குழந்தைகள், பிரபுவின் மாமனார் என 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அந்த ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலியாகியுள்ளனர்.
இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த தீ விபத்து இரவு 8:15 மணியளவில் ரிதுராஜ் ஓட்டல் வளாகத்தில் நடந்தது. மீட்புப் பணியில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பலர் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையின் கடும் முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், தீ விபத்து ஏற்பட்ட இடத்தை சீல் வைத்து முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். சிறப்புக் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications