வாரணாசி வாக்காளர்களில் 2,500 நரேந்திரா, 3,600 அரவிந்த்கள்
வாரனாசி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரனாசியில் 2 ஆயிரத்து 500 நரேந்திராக்கள் மற்றும் 3 ஆயிரத்து 600 அரவிந்த்கள் வாக்களிக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் வாரனாசியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் கைலாஷ் நாத் சவ்ராசியா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹிராலால் யாதவ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் தவிர திரிணாமூல் காங்கிரஸின் இந்திரா திவாரி, சிறு சிறு கட்சிகளை சேர்ந்த 16 பேர் மற்றும் சுயேச்சைகள் 20 பேர் களத்தில் உள்ளனர். 16 லட்சம் வாக்காளர்கள் உள்ள வாரனாசியில் 42 பேர் போட்டியிடுகிறார்கள்.
வாரனாசியில் உள்ள வாக்காளர்களில் 2 ஆயிரத்து 500 பேரின் முதல் பெயர் நரேந்திரா. மேலும் 3 ஆயிரத்து 600 பேரின் முதல் பெயர் அரவிந்த். ஆனால் எந்த வாக்காளர் பெயரும் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் என்று இல்லை. அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயின் பெயரில் 15 வாக்காளர்கள் உள்ளனர். அஜய் என்ற முதல் பெயர் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 16 ஆயிரம்.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான விஜய்யின் பெயரில் மட்டும் 17 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications