ஷாக் சம்பவம்! ஒன்றோடு ஒன்று மோதிய ரோப் கார்கள்.. ஜார்கண்ட் மாநிலத்தில் மோசமான விபத்து
ராஞ்சி: ஜார்கண்ட் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலையில் ரோப் கார்கள் ஒன்றொரு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலையில் பாபா பைடியநாத் மலைக்கோயில் உள்ளது. இங்கு தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற மீட்புப் படையினர், ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

விபத்து
திரிகுட் மலையில் அமைந்துள்ள பாபா பைடியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 18 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணிகள்
இந்த ரோப்காரில் 12 கேபின்களில் குறைந்தது 48 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து ஏற்பட்ட உடன் அங்கிருந்த ரோப்கார் நிறுவன மேலாளரும் மற்ற ஊழியர்களும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்பி சுபாஷ் சந்திரா மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.

என்ன காரணம்
இந்த விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேபிள் கார்கள் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முழு விசாரணை நடத்தும் போது விபத்திற்கான காரணம் தெரிய வரும். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடன் அக்கிராம மக்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பாக மீட்பு
இது குறித்து துணை கமிஷனர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், " நிலைமை இப்போது முழுவதுமாக கட்டுக்குள் இருக்கிறது. சிலர் ரோப்கார் கேபின்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர்" என்றார். இந்த விபத்து தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது உத்தரவின்படியே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications