சத்தீஸ்கரில் 200 மாவோயிஸ்டுகள் திரண்டு தாக்குதல்- 20 பாதுகாப்பு படையினர் பலி!!
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒன்று திரண்டிய மிகப் பெரும்தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 16 பேர் உட்பட 20 வீரர்கள் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள சுக்மா மாவட்டம் தோங்பாலில் மத்திய ரிசர்வ் படையினர் அம்மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மறைந்திருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினரை குறி வைத்து கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சிக்கி 16 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் உயிர் தப்பிய பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில்தான் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் ராமன்சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications