"முதலிரவு".. ஆசையா ரூமுக்கு போன மாப்ளை.. அங்கே பார்த்தால்.. அப்படியே இடிஞ்சு போயிட்டாராம்.. என்னவாம்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: ஆயிரமாயிரம் கனவுகளுடன், ஆசை ஆசையாக முதலிரவு அறையில் நுழைந்தார் மாப்பிள்ளை.. கடைசியில் வாழ்க்கையே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்.. என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபத்தில் உள்ளது பிஜ்னோர் என்ற மாவட்டம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த நபர்.. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு தடபுடலாக கல்யாணம் நடந்துள்ளது.. அன்றைய தினம் குடும்பத்தினர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

20 lakhs Rupees and Uttar Pradesh Young Man complains against his transgender wife, mother in law

முதலிரவு: முதலிரவு அறையில்தான் அந்த அதிர்ச்சி தகவல் மாப்பிள்ளைக்கு தெரியவந்தது.. தன்னுடைய மனைவி ஒரு திருநங்கை என்பதை அறிந்து இடிந்துபோனார். அந்த அறையிலேயே இருவருக்கும் தகராறும் வெடித்தது.

இனிமேல் ஒரு நிமிடம்கூட உன்னுடன் வாழ முடியாது என்று திருநங்கை மனைவியிடம் உறுதியாக சொல்லி விட்டார்.. அத்துடன் விவாகரத்து செய்ய போவதாகவும் அறிவித்தார்.. இதைக்கேட்டதும் மனைவி ஆவேசமடைந்தார். தான் பாலின மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், இதை வெளியே யாரிடமாவது சொன்னால், பொய் கேஸ் போட்டு, ஜெயிலில் தள்ளுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

கடும் அதிர்ச்சி: இதைக்கேட்டு பயந்துபோன அந்த இளைஞர், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. யாரிடம் இதை பற்றி சொன்னாலும், குடும்ப மானம் போய்விடுமே என்று குழம்பி போனார். இப்படியே 4 வருடங்கள் உருண்டோடிவிட்டன.. இந்நிலையில், தற்போது திடீரென கோட்வாலி போலீசில், தன்னுடைய திருநங்கை மனைவி மற்றும் மாமியார் மீது புகார் தந்துள்ளார். அந்த புகார் மனுவில் உள்ளதாவது:

என்னுடைய திருநங்கை மனைவியும், என் மாமியாரும், பணம் கேட்டு அடிக்கடி என்னை தாக்கி துன்புறுத்துகிறார்கள்.. என்னை 2 பேரும் சேர்ந்து, நிர்வாண வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. 20 லட்ச ரூபாய் தராவிட்டால் அந்த நிர்வாண வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.. நான் மறுக்கவும், அவர்கள் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து சித்ரவதை செய்தார்கள்.

நிர்வாண வீடியோ: 4 வருடங்களாகவே, இந்த டார்ச்சர் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை.. சித்ரவதையையும் இனிமேல் அனுபவிக்க முடியாது.. எனவே, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் திருநங்கை மனைவி, அவரது அம்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகார் மனுவை பார்த்ததுமே போலீசார் மிரண்டு போய்விட்டார்கள்.. இந்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), பிரிவு 384 (பணம் பறித்தல்), பிரிவு 420 (ஏமாற்றுதல்), பிரிவு 504 (ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்..

சம்பந்தப்பட்ட இளைஞர், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், உரிய நீதியை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரிடம் தைரியம் சொல்லி உள்ளார்கள்.. என்னத்த சொல்றது போங்க.. கலிகாலம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+